பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 மனிதனது முதற்தேவை, உணவு, உடை இருப்பிடம் என்ற மூன்றும். அளவு முதற் தேவையான, முக்கிய தேவையுமான மூன்று தேவைகளைப் பெற்றால்தான் தேவையான பெற்றால்தான் மனிதன் மனிதனாக வாழமுடியும்.

காட்டுமிராண்டியாக, காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்து, இலைகளையும் தழைகளையும் உடுத்தி கிடைத்த கிழங்கையும் கீரைகளையும், வேட்டையாடிய மிருகங் களின் பச்சை இறைச்சியையும் புசித்து வாழ்ந்த நிலையிலிருந்து, மனிதன், மாடமாளிகைகள், கூட கோபுரங்கள் அமைந்த அழகு நகரங்களைக் கட்டி பட்டு, பருத்தி, கம்பளி போன்ற ஆடைகளை அணிந்து, அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு முதலிய அறுசுவை ஆகாரங்களைப் புசித்திடும். இன்றைய நாகரிக நிலைமைக்கு வளர்ந்திருக்கிறான். இந்த வளர்ச்சிக்கு, மனிதனிடமுள்ள உயிரினங்களிடமில்லாத மற்ற பகுத்தறிவு முதற்காரணம்; மூலக்காரணமுமாகும். மாறுதலுக்கு, மனித வாழ்வின் மகத்தான மாறுதலுக்கு, மனிதனிடம் உள்ள அறிவே, பகுத்தறிவே அடிப்படை, ஆதாரம், வழிகாட்டி! சிந்திக்கத் தொடங்கிய மனிதன்-முதல் சிந்தனை யாளன், இயற்கை வளத்தை, தனது வாழ்வு வசதி