பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61


யாக அமையும் வகைக்குப் பயன்படுத்தத் தொடங்கியதின் விளைவு, நாகரிக வாழ்வின் ஆரம்பக் கட்டம்; முதல் அத்தியாயம்.

🞸🞸🞸

சிந்திக்கத் தொடங்கிய முதல் சிந்தனையாளன், சுயநலமுள்ளவனாக, தன்னைப் பற்றிய மட்டுமே கொண்டவனாக இருந்து எண்ணத்தை விட்டிருந்தால், இன்றைய உலகம், நாகரிக உலகம் ஏற்பட்டிருக்க முடியாது!

🞸🞸🞸

இந்த நாட்டிலே ஜாதிதான் மக்களின் இரத்தத்திலே கலக்கப்பட்டிருக்கும் கடு விஷம்--மனதிலே இடக்கு நோயைப் புகுத்திவிட்ட முறை. எனவேதான், பேதமற்ற சமுதாயத்தை--தத்துவத்தை—சமதர்மத்தை நாம் காணவேண்டுமானால் முதலில் ஜாதி தொலைந்தாக வேண்டுமென்று நான் சார்ந்துள்ள அறிவியக்கம் பல காலமாகக் கூறி வருகிறது.

🞸🞸🞸

மனதிலே உள்ள தளைகளை நீக்குவது அவசியமான காரியமென்பதை உணர்ந்து, ஐரோப்பாக்கண்டத்திலே பேரறிவாளர்களான வால்டேர், ரூசோ போன்றார் அறிவுத்துறைப் புரட்சிக்காகப் பணியாற்றினர். அதே விதமான பணி தேவை.

🞸🞸🞸

மனிதனுக்குள் புகுத்தப்பட்ட அச்சம் அவனுடைய அறிவு ஊற்றைப் பாழ்படுத்துகிறது. அதனாலேயே மனிதன் மனம் அலைமோதி நிற்கிறது.

🞸🞸🞸