பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63


தட்டை உலகு, உருண்டை ஆயிற்று. மேல் ஏழு கீழ் ஏழு லோகம் என்பது வெறும் கட்டுக் கதை என்பது விளங்கலாயிற்று. சூரிய - சந்திரதேவன், இந்திர தேவன்... வாயு, வருணன். அக்கினி என்ற தேவர்களெல்லாம் குடியிருந்து கொண்டு, குதூகலமாக ஆடிப் பாடிக் கொண்டு, ஆரணங்குகளாம் அரம்பை, ஊர்வசி ஆகியோர் புடை சூழ வீற்றிருக்கிறார்கள் என்பதெல்லாம், சுவைமிக்க கற்பனை என்பது தெரியலாயிற்று. கண்ணுக்குத் தெரியாதிருந்த அமெரிக்கா போன்ற நாடுகளைக் கண்டு பிடிக்கவும், கருத்துக்கு எட்டாதிருந்த கருவிகளை அமைக்கவும் முடிந்தது. பஞ்சாங்கத்துக்குப் பக்கத்திலே அட்லாஸ் வந்து சேர்ந்தது வெற்றிச் சிறப்புடன்

🞸🞸🞸

வாழ்வாவது மாயம், இது மண்ணாவது திண்ணம். தேவைதானா, இந்தக் கருத்து இன்றும்?

🞸🞸🞸

வாழ்வை நம்பாதே! எதைத்தான் நம்புவது? வாழ்ந்தால் தானே, எதையும் நம்ப முடியும். வாழா விட்டால், வாழவழி தேடாது சும்மா இருந்தால் சுகம் வருமா? சோம்பேறி என்ற பட்டமல்லவா, கிடைத்து விடும், சுலபத்தில்!

ஆண்டவனிடம் தீண்டாமை ஏன்?


ஒருவனைப் பிறப்பால் உயர்ந்தவனாகவும், உல்லாசியாகவும், குருவாகவும் படைத்து, மற்றவனைத் தாழ்ந்த-