பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


வனாகவும், உழைப்பாளனாகவும். அடிமையாகவும் அமைக்கிறார் அந்த ஆண்டவன். எல்லோரையும் தன் குழந்தைகள் எனக் கருதும் ஆண்டவன் செயலாக அமையுமா இது?

🞸🞸🞸

எப்படி ஒரே ஆண்டவன், ஒருவனை வேதமோதுபவனாகவும், மற்றவனை அவன் திருவடி தொழுபவனாகவும் படைப்பார்--அவருக்கு அறிவில்லையா? அன்பில்லையா? அறம் அறியாரா அவர்? அத்தகைய ஆண்டவன் உண்மையில் இருந்தால் அதைவிட நயவஞ்சகப் பொருள் இந்த அகில உலகிலும் இல்லை; இருக்க முடியாது.

🞸🞸🞸

பாடுபட்டும் மக்கள் பஞ்சையாய் வாழும்போது, பரமனுக்குப் பல லட்சத்தில் பதக்கங்கள், வாகனங்கள். என்ன அறியாமை மக்களிடம்?

🞸🞸🞸

ஆண்டவன் அனைவர்க்கும் தந்தை; ஆண்டவன் முன் எவரும் ஒன்றே, எல்லோரும் சமம், பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. ஆண்டவன் உருவமற்ற அரூபி; அருளுடையவன்; அனாதரட்சகன்; மனமே கோயில், மக்கள் தொண்டே பக்தி என்ற பரந்த கொள்கை, விரிந்த போக்கு, தெரிந்த பாதை, புரிந்த தத்துவம் வேண்டும்.

🞸🞸🞸

ஆண்டவனை உருவமுள்ளவனாக்கி, ஆனைமுகம், ஆறுமுகம், பன்றியுருவம் படைத்து மனிதத் தன்-