பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65


மைக்கே புறம்பான மடத்தனங்களை ஏற்றி மனங் குழைவது நன்றா? நவிலுங்கள் நாட்டோரே!

🞸🞸🞸

குந்தக் குடிசையின்றி, உண்ண உணவின்றி, அணிய ஆடையின்றி, மக்கள் நிர்க்கதியாய் நிலவும்போது, ஆண்டவன் பேரால் கோட்டைகள் போன்ற கோயில்களையும். வாகனங்களையும் மண்டபங்களையும் கட்டுகின்றீரே? இது அந்த அன்புடைய ஆண்டவனுக்கு அருள் படைத்த தந்தைக்கு, உவந்த செயலா? இது அறமெனப் படுமா அன்றி அசட்டுச் செயல் எனப்படுமா என்று ஓர் அரைக்கணம் ஆராயுங்கள் தோழர்களே உம் அறிவைக் கொண்டு!

🞸🞸🞸

வீணையை மீட்டத் தொடங்கியதும், இசை கேட்க வருபவனின் காதுகளை அடைப்பது போல, எழில்மிகு சித்திரத்தைத் தயாரித்துக் காண வாரீர் என்று அனைவரையும் அழைத்துக் காணவரும் சிலரின் கண்களைக் கட்டியிருப்பது போல, பழச்சாற்றின் இனிப்பைக் கூறிக்கொண்டு, பருகக் கொஞ்சம் தருக என்று கேட்பவனை விரட்டுவது போல, ஆலயங்களுக்கு மகிமையும், பலனளிக்கும் சக்தியும் இருப்பதைக் கூறிவிட்டு, அங்கு வரக்கூடாது நுழையக் கூடாது என்று சிலரை அல்ல--ஏறக்குறைய எட்டுக் கோடி மக்களைத் தடுத்து வருகிறோம். இன்று நேற்றல்ல. தலைமுறைத் தலைமுறையாக.

🞸🞸🞸

பொருளைக் காட்டி மறைப்பர் குழந்தைகளிடமிருந்து பெற்றோர். நாமோ புனித ஸ்தலங்களின்