பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 பெருமையைக் கூறிப் பூட்டி விடுகிறோம். அங்கு ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் வரக்கூடாது என்று. ஏன்? கெட்ட பொருளைத் தொடக்கூடாது- குப்பை கூளம், தாற்றப் பொருள், ஆகியவைகளிடம் நிச்சய மாகத் தீண்டாமை அனுஷ்டிக்கத்தான் வேண்டும். அக்கினித் திராவகம், வெடிகுண்டு, விஷம், சீறும்நாகம், கொட்டும் தேள் இன்னும் பலப் பல உண்டு ஆபத்துத் தரக்கூடியவை. அவைகளைத் தீண்டாதிருக்கவேண்டும்- நியாயம் அது. ஆனால் பலகோடி மக்களை, தாய்நாட் டாரை மூதாதையர் கால முதற்கொண்டு நம்முடன் மாட்டோம் என்று வாழ்ந்து வருபவர்களை தீண்ட கூறுவது- தீண்டாமையை அனுஷ்டிப்பது. எவ்வளவு வேதனை? எவ்வளவு அர்த்தமற்றது? கள்ளக் கையொப்பக்காரன் கரம் கூப்புகிறான்- விபசாரி விசேஷ அபிஷேகம் செய்விக்கிறாள் குடி கெடுப்பவன் கும்பாபிஷேகம் செய்கிறான். கொள்ளை இலாபமடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். ஒழுக்கக் குறைவு உள்ளவர்கள், அழுக்கு மனம் படைத் தோர், இழுக்கான வழி செல்பவர்கள் ஆலயங்களிலே நுழைய முடியாதபடி தடை உண்டோ? இல்லை. ஆனால் ஆதித்திராவிடரை மட்டும் ஆலயத்துக்கு வரக் கூடாது என்று தடுக்கிறோம் - நியாயமா?