பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

69 அந்தக் காலம் எது என்பதற்கு யாராலும் திட்ட மான முடிவு கூறமுடியாது; நிர்ணயத்தையும் காட்ட முடியாது. அந்தக்காலம் என்பது முடிவற்றது. விட்டுக் கூறமுடியாதது. அளக்க அளக்க நீண்டு கொண்டே போகிற கஜக்கோல் அது! அள் எந்தக் காலத்துப் பழக்கமானாலும் சரி, அது இந்தக் காலத்துக்குப் பொருந்துகிறதா? வாழ்க்கைக்குத் தேவையானதுதானா? அறிவுக்கு ஏற்றதா? என்றுதான் நாம் பார்த்துப் பின்பற்ற வேண்டுமே தவிர, அந்தக் காலத்துப் பழக்கம் என்பதற்காகவும் கண்ணை மூடிக் கொண்டு எதையும் அர்த்தமற்றும், பொறுத்த மில்லா மலும் பின்பற்றக் கூடாது. உலகத்தில் மற்ற நாடுகள் எவ்வளவோ முன்னேற்ற மடைந்துள்ளன. இந்த நாடு மட்டுமேதான் எல்லாத் துறைகளிலும் பழம் பெருமை பேசிக் கொண்டும் அந்தக் காலம் என்று கூறிக் கொண்டும் முன்னேறாமல் பின் தங்கிக் கிடக்கிறது. நாம் அறிவுத் துறையில் முன்னேற்ற மடைந்தால் தான் நம்மிடமுள்ள பழமைக் கருத்துக்கள் அகலும்; யாசி பிடித்துள்ள கண்மூடிப் பழக்கங்களும் தொலையும்; ம தமூட நம்பிக்கைகள் முறியடிக்கப்படும் என்பதை நாம் உணரவேண்டும். சுய மரியாதைத் திருமணங்கள். செய்து கொள்வதும், சீர்திருத்தத் திருமணங்களைப் பரப்புவதும் அறிவுத்துறையில் நாம் முன்னேறுவதற் கான அடிப்படைகளில் முக்கியமானதாகும். அ. 5-600