பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளின் உயர்வு


பாட்டாளி மக்களின் விடுதலை விழா மேனதினம். நாடு அல்ல இதற்கு எல்லை! பாட்டாளிகள், வாழ்வுக்காக--விடுதலைக்காக--உரிமைக்காக மே தினத்தைக் கொண்டாடுகின்றனர். நாளொன்றுக்கு. 8 மணி நேரம் உழைப்பது, 8மணி நேரம் குடும்பத்தினரிடம் குதூகலமாக வாழ்வது, மற்ற 8 மணி நேரம் ஓய்வாக இருப்பது--இந்தத் திட்டத்தை மே தினம் எடுத்துக் கூறுகிறது.

🞸🞸🞸

தொழிலாளி, துயரின் உருவமாகிறான். அடிமைப்படுகிறான். வாழ்வு பெரியதோர் சுமை என்று எண்ணுகிறான். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள், எட்டு மணி நேர வேலைத் திட்டத்தை வலியுறுத்தினர். அதனை வலியுறுத்த, ஆண்டுதோறும் மே மாதம் முதல் தேதி அன்று விழா நாளாகக் கொண்டாட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர்.

🞸🞸🞸

முதலாளித்துவம் ஒரு மதம் பிடித்த யானை. அந்த யானையைப் பிடித்து, வாழை நாரினால் துதிக்கையைக் கட்டி, அந்தக் கயிற்றை ஒரு வாழை மரத்தில் கட்டி விட்டு, "பார், பார் நான் முதலாளித்துவத்தைக்கட்டிப் போட்டு விட்டேன்" என்று கூறினால் சரியா?

🞸🞸🞸

ஜார் மன்னன் ஆட்சியிலே அவனால் இழைக்கப் பட்ட கொடுமைகளை ஒழிக்க எப்படி அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருமித்துப் போராடினார்-