பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


களோ, பிரான்சிலே பணப்பட்டாளத்தின் கொடுமைகளை எதிர்த்துப் பல பட்டினிப் பட்டாளங்கள் ஒன்று சேர்ந்து தங்கள் புரட்சிச் சக்தியின் மூலம் லூயி மன்ன ருக்கு அறிவுறுத்தினார்களோ, அதே போன்று நம் நாட்டுத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்; மக்களின் சக்தி ஒன்று திரண்டு, மக்களை வாட்டி வதைக்கும் முதலாளித்துவத்திற்குப் புத்தி புகட்ட வேண்டும்.

🞸🞸🞸

பாட்டாளிகளின் போராட்ட முயற்சியின் இடை யிலே ஒரு நாள் ஓய்வு பெற்று நின்று, சென்ற கால வருங்கால் கணக்கைப் பார்க்கும் திருநாளே இம் மே நாள். சென்ற காலங்களில் மகத்தான வெற்றிகளைக் காண முடியாவிட்டாலும், கண்ட சிறு சிறு வெற்றிகளை நினைத்து, மகிழ்ந்து, உள்ளத்தை ஊக்குவித்துக் கொள்ளவும், வருங்காலத்தில் ஆற்ற வேண்டிய செயல்களை எண்ணிச் செயலாற்றும் நெறியிலே உறுதி கொள்ளவும் இம் மே நாள் பயன்படுகிறது.

🞸🞸🞸

இன்று தொழிலாளர்களில் பலர் மாயப் பிரபஞ்ச வாழ்வைப் பற்றியும். ஆண்டவன் திருவடியில் இரண்டறக் கலப்பது எப்படி என்பதைப் பற்றியும் சிந்தனை செய்து கொண்டிருக்கிறார்களே அதை முதலில் போக்கடிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முதலில் வாழ்க்கையிலே உள்ள சலிப்பைப் போக்கவேண்டும். இந்த உலகம் பெரியது, விழுமியது, வளமுள்ளது என்ற விரிந்த மனப்பான்மை அவர்களிடையே தோன்ற வேண்டும். நாம் வாழப் பிறந்துள்ளோம் என்பதை அவர்கள் உணரவேண்டும்.