பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பஞ்சாங்கமில்லாத முடியாது. 75 வீடுகளை நீங்கள் காண நாள் பார்க்காத மக்களை நீங்கள் பார்க்க முடியாது. சகுனம் கேட்காத ஜென்மங்களை நீங்கள் காண்பது. அரிது. மார்கழித் திருநாள் கொண்டாடாத மக்கள் மிகக் குறைவு. சித்திரா பௌர்ணமிக்குப் பொங்கலிட்டுப் படைக் காத வீடுகளை நீங்கள் பார்க்க முடியாது. பஞ்சாங்கம் பார்க்கும் பழைய புத்தி அடியோடு ஒழிந்தால் ஒழிய மக்கள் பகுத்தறிவைப் பெற முடியாது.

கோழியோடு அதிகாலையில் விழித்தெழுந்து கோட்டானோடு தூங்குகிறான் நம் தொழிலாளி! ஓயா மல் உழைத்து உழைத்து அருமையான பொருள்களை உற்பத்தி செய்கிறான். ஆனால் அவன் வாழும் வாழ்க்கை எப்படி? சுருங்கச் சொன்னால் அவன் வாழ்வது மிருக வாழ்க்கை தான். நாகரிக நாட்டிலே, தன்னரசு தழைத்து ஓங்குவதாகச் சொல்லும் இந்த நாட்டிலே தொழிலாளி மிருக வாழ்க்கை வாழ வேண்டியிருக் கிறது. மிருகங்களுக்கு கிடைக்கும் ஓய்வுகூட ஏழைத் தொழிலாளிக்குக் கிடைக்கவில்லை. உற்பத்தியைப் பெருக்கும் தொழிலாளி உயர முடிகிறதா?

ஆலைத் தொழிலாளி சகுனத்திலே நம்பிக்கை வைத் திருப்பது விசித்திரமானது. அமெரிக்காவிலிருக்கும்