பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


தொழிலாளிகள் சகுனம் பார்ப்பதில்லை. ரஷ்யாவில் உள்ள தொழிலாளி சகுனம் என்றால் என்ன என்று கேட்பார். சகுனம் பாராத மேலை நாட்டுத் தொழிலாளிகள், கடிகாரத்தைக் கவனித்து நடக்கிற மேனாட்டினர், முன்னேற்றத்தின் உச்சியிலே இருக்கிறார்கள். நம் நாட்டுத் தொழிலாளர்கள், கடிகாரத்திற்கு மதிப்புத் தருவதில்லை. கடிகாரம் வாங்கப் பணமில்லாமலே பஞ்சாங்கம் வாங்கி வைத்துக் கொண்டு இராகு காலம் பார்க்கிறார்கள்; சகுனம் பார்க்கிறார்கள்; இன்னும் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள்.

🞸🞸🞸

உலகம் மாயம் இல்லை. உழைப்பவன் வாழ்வும். மாயமன்று. ஆனால் உழையாதவன் உல்லாசத்தில்தான் மாயம் இருக்கிறது.

🞸🞸🞸

மனிதன் உணவு உண்கிறான்; மிருகமும் உணவு உண்கின்றது. மனிதன் காதல் புரிகிறான். மிருகமும் காதல் புரிகிறது. மக்களிலே ஆணும் பெண்ணும் மருவு கின்றனர். விலங்குகளிலும் அப்படியே. ஆனால் மிருகத் திற்குத் தேவைக் கேற்ற வசதி இருக்கிறது. மனிதனுக்கோ தேவைக்கேற்ற வசதி இல்லை.

🞸🞸🞸

நாட்டிலே ஒரு குலம் பாடுபடாது உண்டு உறங்கிக் கிடக்க, மற்றவர் உடல் தேய, உள்ளமும் உணர்வும் தேய, உழைத்துக் கெடுவதா?

🞸🞸🞸

பண்ணைகளில் பாடுபட்டுப் பயிர் செய்வது சீரகச் சம்பா, கிச்சிலிச் சம்பா இன்னவித உயர் வகுப்புப் பயிர்கள். ஆனால் அவன் உண்பது கால் வயிற்றுக் கஞ்சி.