பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77


அதுவும் கம்பங் கூழோ கேழ்வரகுக் கஞ்சியோதான். பாட்டாளி பாடுபட்டுக் கட்டுவது மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் போன்ற மனைகள், நான்கடுக்கு ஐந்தடுக்கு அரண்மனைகள்; அவைகளை நிமிர்ந்து நோக் கினால் கழுத்துவலிக்கும். ஆனால் அவன் அண்டியிருப்பது குனிந்து நுழைய வேண்டிய குடிசை! ஏன் இந்தப் பேதம் இந்த நாட்டிலே?

🞸🞸🞸

பணக்காரன் குளம், குட்டைகளுக்குச் சமமானவன்; முதலாளி ஊற்றுக்குச் சமமானவன். மழை பெய்தால் குளம் குட்டைகளில் நீர் இருக்கும்; இன்றேல் வரண்டு விடும். ஆனால் ஊற்றோ என்றும் நீர் சுரந்து கொண்டே இருக்கும். இத்தகைய பேதம் இருக்கிறது பணக் காரனுக்கும்--முதலாளிக்கும்.

🞸🞸🞸

உழைக்க ஒரு குலம், அதனை உறிஞ்சப் பிறிதொரு குலம் என்ற நியதி நியாயமா?

🞸🞸🞸

தோழமை--ஆழ்ந்த கருத்துள்ள அழகான சிறு சொல்.

🞸🞸🞸

ஒற்றுமை--கூட்டுறவு--ஒப்பந்தம்--கூடிவாழ்தல்--நட்பு--அன்பு--என்றுள்ள எத்தனையோ பதங்களும், ஒவ்வோர் அளவுவரை மட்டுமே சொல்லக் கூடியவை--முழுத் திருப்தி தருபவையல்ல--தோழமை என்ற நிலையை அடையும் படிக்கட்டுகள் இவை--ஆனால் தோழமை, இவ்வளவுக்கும் மேலான ஓர் நிலை,பேதம் நீங்கிய,