பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78


நீக்கப்பட்ட அல்லது கவனிக்கப்படாத நிலை அல்ல--பேதம் ஏற்படாத நிலை ஏற்பட முடியாத நிலை.

🞸🞸🞸

ஒருவரை ஒருவர் கண்டவுடன் முகமலர்ச்சி சிரம மின்றி ஏற்படவேண்டும்- பயன் கருதி அல்ல--அர்த்த மற்று அல்லகண்டதும் களிப்பு நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து அந்தக் களிப்பு மலரவேண்டும். அதுவே தோழமை!

🞸🞸🞸

சமதர்மம்--ருசிகரமான வார்த்தை--நாட்டிலே இன்று பலராலும் பேசப்பட்டு வரும் இலட்சியம். பலராலும் என்றால் உண்மையிலேயே அந்த உயர்ந்த இலட்சியத் தின்படி சமூகம் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

🞸🞸🞸

நீதியையும் நேர்மையையும், சமுதாயத்தில். அமைதியையும், சுபீட்சத்தையும் விரும்பும் எவரும், தொழிலாளர் பிரச்னையை அலட்சியப்படுத்தி விடவோ, அல்லது அடக்கு முறைகளால் அழித்து விடக் கூடுமன்றோ எண்ண முடியாது.

🞸🞸🞸

எந்த ஸ்தாபனமும், ஐக்கியத்தை, ஒற்றுமையைக் கொண்டதாக இருந்தால் மட்டுமே வலிவுடன் விளங்கும், பயன் விளையும்.

🞸🞸🞸

ஸ்தாபனம்--அதாவது அமைப்பு--பலருடைய எண்ணங்களைத் திரட்டி, பலருடைய சக்திகளை ஒருங்கு சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஓர் பொது இடம்--ஓர் பாசறை. பாசறையிலே, பலவிதமான போர்க்கருவி-