பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

 களும் வீரர்களும் தேவை. கருவிகளின் எண்ணிக்கையும்--வகையும் வளர்ந்து கொண்டு இருக்க வேண்டும். பாசறையின் உபயோகம் அதிகப்பட வேண்டுமானால் வாள் மட்டும் போர்போல் குவித்து வைத்துக்கொண்டு கேடயம் தேடாமல் இருப்பதோ, வில்களைக் குன்றெனக் குவித்துக் கொண்டு அம்புகள் இல்லாமலிருப்பதோ. துப்பாக்கிகளைக் கிடங்குகளில் குவித்துவைத்துக் கொண்டு, வெடிமருந்து தேடாமலிருந்து விடுவதோ, இவையாவும் ஒழுங்காகவும், தேவைக்கேற்ற அளவும் இருந்து, இவைகளைத் திறம்பட உபயோகிக்கும் ஆற்ற லுக்கு வீரர்கள் இல்லாதிருப்பதோ, வீரர்கள் இருந்தும், இவர்களை நடத்திச் செல்லும் படைத்தலைவன் இல்லா திருந்தால், பாசறை இருந்து என்ன பயன்? அழகிய சிலைபோல் இருக்குமே தவிர பயன் தரும் மனிதராக இருக்க முடியாது.

🞸🞸🞸

குறைகளை உணர்ந்து, அவைகளுக்குக் காரணம் யாவை என்பது பற்றிய விவாதத்திலே ஈடுபட்டு உண்மைக் காரணத்தைக் கண்டுபிடித்து, பிறகு அவை களைப் போக்கிக் கொள்ள, தனித் தனியாக முயற்சித்துப் பார்த்து, முடியாது போன பிறகு தொழிலாளர்கள் ஓர் ஸ்தாபனரீதியாகத் தமது குறைகளை எடுத்துக் கூறித் தான் பரிகாரம் தேடவேண்டும் என்ற முடிவுக்கு வந் தனர். தங்களின் வாழ்க்கை முறையும், தொழில் முறை யும், தங்களுக்குள்ள வாழ்க்கை வசதிக் குறைவுகளும். எல்லா தொழிலாளருக்கும் ஒரே விதமானதாக இருக்கக் கண்டு, அனைவருக்கும் ஒரே வகை வியாதி என்று தெரி வதால், அனைவரும் ஒரே வகை மருந்து தேடவேண்டும். என்று முடிவு செய்து, ஸ்தாபனங்களை ஏற்படுத்தினர். இந்தப் பொதுத் தன்மை கெடாதிருக்கு மட்டும்