பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


பெரிய மரங்களை மாளிகை மண்டபத்துக்குத் தூண்களாக அமைத்து விட்டால் மட்டும் போதாது. மிக மிகச் சாதாரணச் செல், மரத்திலே சிறு துளைகளிலே புகுந்து கொள்ளாதபடியும் பார்த்துக் கொள்ள வேண்டும்-- செல் அரிக்க ஆரம்பித்தால் செம்மரமும் சரி, எம்மரமும் சரி கெடும்.

🞸🞸🞸

தாங்கும் சக்தி தாக்கும் சக்தி இரண்டும் ஒரு சேர ஸ்தாபனத்துக்குத் தேவை. அதற்கேற்ற வகையிலே அந்த அமைப்பு இருக்க வேண்டும்-- இருக்க வேண்டு மானால், இருவகை சக்திகளையும் திரட்டவும், திரட்டியதை உபயோகிக்கவும், ஏற்ற தகுதி படைத்தவர்கள் ஸ்தாபனத்தில் இருக்க வேண்டும். ஒருவர் இருப்பது மற்றவருக்கு வலிவு என்ற எண்ணம், குன்றாது, குறை யாது இருக்க வேண்டும். அந்த எண்ணத்தாலேயே ஸ்தாபனத்தின் ஐக்கியத்தைக் குன்றாமல் காப்பாற்ற முடியும்.

🞸🞸🞸

அடிப்படை பலமாக இருந்தால் மாளிகை கெடா திருப்பது போலக் கொள்கை பலமிருந்தால் ஸ்தாபனம் கெடாது.

🞸🞸🞸

ஸ்தாபன ஐக்கியம், ஒரு முறைப்பாடுபட்டுச் சாதித்து விட்டு, அதைக் கண்டு சந்தோஷப்பட்டுக் கொண்டு இனிக் கவலை இல்லை என்று இருந்து விடக் கூடிய ஒரு சம்பவமல்ல. எப்போதும் விழிப்போடு இருந்து கொண்டு அவ்வப்போது பழுது பார்த்துக் கொண்டு இருந்தால் மட்டுமே காப்பாற்றக் கூடிய ஓர் அற்புதமான ஜீவ சக்தி. ஸ்தாபனத்தின் பலமும் பயனும், அந்த