பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83


ஐக்கியத்தை--ஒற்றுமை உணர்ச்சியைப் பொறுத்தே இருக்கிறகிறது.

🞸🞸🞸

வீணை உயர்தரமானதால், வித்வானும் தேர்ந்தவர் தான். ஆனால் ஒரு நரம்பு மட்டும் ஓரிடத்தில் தளர்ந்து இருக்கிறது என்றால், வீணையின் நாதமும் கெடும்; வித்வானின் நாதமும் பாழ்படும். ஸ்தாபனத்தின் ஐக்கியம் சங்கீதத்துக்கு உள்ள சுருதி ஞானத்தைப் போன்றது--மிக மிக ஜாக்கிரதையாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

🞸🞸🞸

முதலாளிகளுக்கு கிடைக்கும் லாபம் அவர்கள் மேனிமினுக்குக்குப் பயன்படுத்தும் அளவு இருக்கக் கூடாது. அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு, குடும் பத்தைக் காப்பாற்றுவதற்குப் போதுமானதைத் தவிர மீதிப் பணத்தை வரி போட்டு அரசாங்கம் வாங்கிக் கொள்ள வேண்டும்.

🞸🞸🞸

தனிப்பட்ட எவரும் எந்த தொழிற்சாலையையும் எடுத்து நடத்த அனுமதிக்கக் கூடாது. முதலாளிகளிடம் இருக்கும் எல்லா ஆலைகளையும் அரசாங்கம் கைப்பற்றிக் கொள்ள வேண்டும். எல்லா தொழிற் சாலைகளையும் சர்க்கார் எடுத்து நடத்த வேண்டும். அவ்விதம் செய்தால் அதில் கிடைக்கும் லாபம் அரசாங் கத்தைச் சாரும். எந்தத் தனிப்பட்ட முதலாளியையும் சாராது. அதனால் முதலாளித்துவம் வளராது; பூண்டே. இல்லாமல் ஒழிந்து விடும்.

🞸🞸🞸