பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84


முதலாளிகள், அதிக சரக்கைத் தயார் செய்து அகண்ட தன் நாடு பூராவிலும் விற்று, நிறைய லாபம் சம்பாதித்து பெரிய முதலாளிகள் ஆகிறார்கள்.இம் முறையை ஒழிக்க வேண்டும். முதலாளிகள் ஒரு குறிப் பிட்ட இடம் வரையில்தான் வியாபாரம் செய்யலாம். அதற்குமேல் செய்ய வேறு அரசாங்கத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற முறை இருக்க வேண்டும்.

🞸🞸🞸

ஓய்வு நேரம்--வேலை கிடைத்து அதிலே ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வேலை நேரம் போக, மிச்சமிருக்கும் பொழுது வேலை செய்யும் நிலையில் இல்லாதவர்களின் 'காலம்'--ஓய்வு அல்ல--அது ஓய்யாரம். வேலை கிடைக் காததால் வேலை செய்யாது இருப்பவர்களுக்கு கிடைத் திருப்பது 'ஓய்வு' அல்ல. திகைப்பு. வேலை செய்யும் மனப் பான்மையற்றவர்கள் காலத்தைக் கொலை செய்வது 'ஓய்வு' அல்ல--அது சோம்பல். ஆக, யாராவது ஒரு வேலையும் செய்யாது இருக்கும்போது அவர் ஓய்வாக இருக்கிறார் என்று கூறிவிடுவது கூடாது.

🞸🞸🞸

பொது மக்களின் பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்கும் 'ஓய்வு' இருக்கிறதே, அதையே நாகரிகத் தின் அளவுகோலாகக் கொள்கிறார்கள் நல்ல அறி வாளர்கள்.

🞸🞸🞸

உழைப்பு, உருக்குலைந்து விடக் கூடாது--உடலையும் சரி, உள்ளத்தையும் சரி, வாழ்விற்காக வசதி தேடுவ தற்கு உழைத்து, அந்த உழைப்பினாலே, உருக்குலைந்துச் போகும் நிலை மனிதனுக்கு ஏற்படுமானால், அவன்