பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85


முட்டையிட்டதும் செத்து விடும் கோழி. அரும்பு விட்டதும் பட்டுப்போகும் செடி போலப்பயன் காணாமலும் பயன் தாராமலும், போய் விடுகிறான்.

🞸🞸🞸

உழைப்பு, நம்முடைய உடலையும் உள்ளத்தையும் சிதைத்து விடவில்லை. வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கும் குடும்ப வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தக்க வருவாயைத் தருகிறது. இந்த வருவாயைப் பெறுவதற்காக உழைத்த நேரம் போக மிச்ச நேரம் ஓய்வு கிடைக்கிறது என்ற நிலைமை நாட்டு மக்களின் பெரும்பான்மையினருக்கு ஏற்பட்டால்தான், ஓய்வு நேரம். சமூகத்தின் தரத்தையும் மனப்பண்பையும் உயர்த்தக் கூடிய சக்தி பெறும்.

🞸🞸🞸

இயற்கை நம்மைத் துரோகம் செய்து விட வில்லை. மற்ற நாடுகளிலே உள்ளதைவிட, இயற்கை வளம் இங்குக் கண்டவர்கள் பொறாமைப் படும் அளவிற்கு இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் தொழில் வளம், தொழில் திறம் போதுமான அளவு பெருகாத்தால் தரித்திரம் தாண்டவமாடக் காண்கிறோம்.

🞸🞸🞸

பெரும்பான்மையினருக்கு ஓய்வு கிடைத்து, அந்த ஓய்வை தக்கபடி பயன் படுத்தினால்தான் பாடுபடுபவருக்கு மேலும் தொடர்ந்து பாடுபடவும், திறமையுடன் பாடு படவும் முடியும்--பிறகு பொதுச் செல்வம் வளரும்; சீர் உண்டாகும்; நாடு செழிக்கும். இவைகள் எல்லா வற்றையும்விட, மனித மாண்பு மலரும். உழைத்தோம். வாழ்வின் பயனைப் பெறுகிறோம் என்ற களிப்பு முதலிலே

🞸🞸🞸


அ. B—600