பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86


ஏற்படவேண்டும். பிறகுதான் ஓய்வைச் சுவைக்க முடியும்.

🞸🞸🞸

வேலை, மனிதத் தன்மையை மாய்க்காத அளவு இருக்க வேண்டும்.

ஓய்வு சிலருக்கு--வேலை பலருக்கு என்ற--முறை மாறினாலொழிய ஓய்வு சமூக உயர்வுக்குப் பயன்படும் பண்பு ஆக முடியாது.

🞸🞸🞸

வாழ்க்கைத்தரம் மட்டமாக இருக்கும் சமூகத்திலே. ஓய்வு கிடைத்துப் பயனில்லை. பொருளும் இல்லை. வேகாத பண்டத்தை வெள்ளித் தட்டிலே வைத்துத் தரும் வீண் வேலையாகும்.

🞸🞸🞸

ஓய்வுஉயர்ந்த பண்புள்ள நண்பன் மூலம் தாம் என்ன பெறமுடியுமோ அவ்விதமான மனமகிழ்ச்சியைத் தருவதாக அமைத்துக் கொள்ள வேண்டும். அது இன்றுள்ள சமூக, பொருளாதார அமைப்பு முறையில், சாத்தியமாகுமா என்பது மிகமிகச் சந்தேகம்.

🞸🞸🞸

உதக மண்டலத்து வனப்பு, கொடைக்கானல் குளிர்ச்சி, குற்றாலக் கவர்ச்சி, இவைகளைக் கண்டு களிக்கும் பொழுது போக்கு--ஓய்வு--எவ்வளவு பேருக் குக் கிடைக்க முடியும்? வாழ்க்கைத் தரம் பொதுவாக உயர்ந்தாலொழிய இத்தகைய 'உல்லாசம்' சிலர் சொல்லப் பலர் அதிசயிக்கும் பேச்சளவாகத்தான் இருந்து தீரும்.