பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91


முறையும் மாறி, "எல்லோரும் இந்நாட்டு மன்னர்" என்று பாரதியார் சொன்னபடி அனைவரும் உரிமையுடன் உவகையுடன் வாழவேண்டும். நாடு பூந்தோட்டமாக விளங்கி, நானிலத்தோர் கண்டு புகழும் நிலை அடைதல் வேண்டும் என்பது வாலிபர்களின் இன்பக் கனவு.

🞸🞸🞸

சுதந்திரம்--விடுதலை--என்றால், சட்டசம்பந்தமான சொற்களின் மாற்றம் என்றல்ல வாலிபன் எண்ணுவது. புதிய நிலை--புது அழகு--புது உருவம் புதிய மகிழ்ச்சி நாடு புதுக்கோலம் கொள்வது என்றே கருதுகிறான்; உண்மையும் அதுதான்.

🞸🞸🞸

சுதந்திர இந்தியாவிலே, வளைவுகளை நிமிர்த்த படு குழிகளை மூட, பாதைகளைச் செப்பனிட, சூது மதியினரை அடக்க, சொந்த மதியற்றோருக்கு அறிவு புகட்ட, சுரண்டுபவனை அடக்க, சோர்ந்திருப்பவனுக்கு உரம் ஊட்ட, பஞ்சம் வராமல் தடுக்க, படிப்பைப் பரப்ப, தொழிலை வளர்க்க, வாலிபத்தை வளமாக்க--எண்ணப் போனால் மளமள வென்று பலப்பல வேலைகள் தெரியும் மனக் கண்முன், இவைகளைச் செய்யவேண்டும். அதற்கான உறுதிவேண்டும். செய்வதைத் திருந்தச் செய்ய வேண்டும்.

🞸🞸🞸

பழமை பயங்காட்டும்; வைதீகம் மிரட்டும்; ஜாதி எதிர்க்கும், சம்பிரதாயம் சீறும்; குருட்டுக் கோட்பாடுகள் முரட்டுப் பிடிவாதங்கள், அர்த்தமற்ற பற்று பாசங்கள், இவைகளெல்லாம் இருண்ட மண்டபத்திலே வட்ட மிடும் வௌவால்கள் போலக் கிளம்பும். உற்றார் உறவினர், அண்ணன் தம்பி, பெற்றோர் பெரியவர்கள், எங்-