பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

 யாக்கிடும் இலக்கியம், கற்பனை இலக்கியம், காவியம், கதை, கட்டுரை, ஆராய்ச்சி, முன்னேற்றம், சிந்தனை, சீர்திருத்தம் பற்றிய முற்போக்கு இலக்கியம், மறுமலர்ச்சி இலக்கியம் என்று இயற்றமிழ் எத்தனையோ சுவையும், சுவையற்றதுமான பயனும் பயனற்றதுமான பல இலக்கியங்களைக் கொண்டிருக்கிறது.

மாங்கனிகளை, நன்மை பயப்பவை, தீமை தருபவை. உபயோகமுள்ளவை, உபயோகமற்றவை என்ற முறையிலே பிரித்துப் பாகுபடுத்தித் தெளிந்து, தேர்ந்து உண்பது போல, இயற்றமிழில் அடங்கிய இலக்கியங்களையும் ஆய்ந்து தெளிந்து கற்றிட வேண்டும். காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்த, உபயோகமான இலக்கியங் களையே படிக்கவேண்டும்!

🞸🞸🞸

மேலே முள், முரட்டுத்தனமான உருவம், முட்களைக் கொண்ட தோல் மூடியிருக்கிறது. ஆனால் உள்ளே உருசியான பழச்சுளைகள்; உண்ண உண்ணத் தெவிட்டாத பழச்சுளைகள்; உடலுக்கு உறுதியான பழச்சுளைகள். முள் நீக்கித் தோலை உரித்தெடுத்துப் பெறும் பலாச்சுளையைப் போன்றது தான், இசை!

இசையைக் கற்பது, இசைவல்லுநராவது எளிதல்ல; எல்லோராலும் முடியக்கூடியதுமல்ல!

இசையில் தேர்ந்திட, இராகம், தாளம், ஆலாபனம் இன்னும் எத்தனையோ முறைகளைத் தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டிய நிலை! இவையெல்லாம்--இத்தகைய கட்டு திட்டங்களெல்லாம் முதலில் சுவையைத் தராது இசைத் தமிழில், எல்லோருக்கும். ஆனால், இசைவாணர்கள் இனிய குரலில், பாடக்கேட்டிடும் பொழுது பரவசமடைகிறோம். கேட்டுக் கேட்டு