பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலை உணர்ச்சி!


கலை, ஓர் இன மக்களின் மனப்பண்பு; அவ்வின மக்களிடையே தோன்றும் தெளிவு, வீரம், ஆகியவற்றின் எடுத்துக்காட்டு. எனவே, கலை இனவளர்ச் சிக்கு ஏற்றபடி மாறியும், விரிந்தும் வருமென்பதே. நுண்ணறிவின் துணிபு.

🞸🞸🞸

இனத்துக்கோர் கலையும், இடத்தின் இயல்பு, தட்ப வெட்பம் ஆகியவற்றிற்கு ஏற்ற முறையிலும், கலை உண்டாகும், வளரும், மாறும்.

🞸🞸🞸

தமிழ் இசை உணர்ச்சி பெருகி, வளர்ச்சியடைந்து வருகிறது. தன்மதிப்புப் பாடல்கள் தமிழகத்தில் பாடப் பட்டு பரவி வருகின்றன.

🞸🞸🞸

நாடகத் துறையிலேயும், நல்லதொரு மாறுதல், மறுமலர்ச்சி தோன்றிவிட்டது. நல்லறிவுப் பாதைக்கான நாடகங்கள் சூழ்நிலையால் பரிதவித்திடும் மனிதரைப் பற்றிய நாடகங்கள் நடிக்கப்படுகின்றன.

🞸🞸🞸

முத்தமிழ், நாடெங்கும் முழங்கப்படுகிறது. முத்தமிழ் தமிழர் வாழ்வும் வளமும் பற்றிய அக்கரை கொண்ட முறையில், துறையில், நல்ல வாழ்வுக்கான கருத்துக்களைப் பரப்பிடும் பணியில் பயன்படுத்தப் படு-