பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

102 வந்தோர், நீரிலே நெருப்பின் சக்தியைக் கண்டறிந் தோர், அனைவரும் நம்போல் மனிதரே. அவர்களால் முடிந்தது நம்மால் ஆகும் என்ற நினைப்பு அவர்களை ஊக்குவிக்கும் சக்தியாயிற்று. அவைகள் சாத்தியமான போது மேடைப் பேச்சு ஏன் சாத்தியமாகாது. பேசாமல் இருப்பது வேண்டுமானால் சிரமம் சிந்தனையை அடக்கியே சும்மா இருப்பதரிது - பேசுவது எளிது - பேசுவதை, ஒழுங்குக்கும் முறைக்கும் கட்டுப் படுத்துவதுதான் மேடைப் பேச்சு. இந்நாளில் மேடைப் பேச்சுக்குத் தேவையும் பயனும் உள்ளது என்பது உணர்ந்து, அதனை நாமும் பெறமுடியும் என்ற நம்பிக்கையும் கொள்வது முதல் வேலை. வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட பிரச்சினை களைப் பற்றி, மக்கள் குழப்பமான கருத்து கொண்டிருந் தால் தெளிவு அளிப்பது, மக்கள் மருண்டிருந்தால் மருட்சியை நீக்குவது, மக்கள் கவலையற்று இருந்தால், பிரச்சினையின் பொருப்பை உணரச் செய்வது, காரியமே மேடைப் பேச்சு.

  • பான்ற

சரஸ்வதி தாண்டவமாடுகிறாள்' அவன் நாவில் என்று புகழ்வதும், 'தம்பி என்னடா சண்டப் பிரசண்ட மடிக்கிறார் - வீசு மலைப்பிஞ்சுகளை என்று ஏசுவதும் ஏககாலத்தில் நடைபெறும் விநோத புரியிலே இருக் கிறார் மேடைப் பேச்சாளி.