பக்கம்:அண்ணா கண்ட தியாகராயர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

வாரிப்பிரதிநிதித்துவத்தை ஆதரித்துப் பேசுகிறார்கள், சட்ட சபையிலே இனி எந்தக்கட்சி வந்தாலும் அந்தக் கட்சி நம் கழக வேலைகளைச் செய்யும்.

ஒருவனுக்கு ஒரு மனைவிக்குமேல் கூடாது என்று 25 ஆண்டுகளுக்கு முன்னர் கல்லடிபடப் பேசினோம். இப்பொழுது என்ன ஆயிற்று? சட்டமே வந்துவிட்டதே! முருகர் கடவுளாக இருக்கிற காரணத்தால் அவருக்கு விதிவிலக்கு ஏற்பட்டிருக்கிறது. முருகக்கடவுள் மனிதராக இருந்தால் இன்று சர்க்காரால் தண்டிக்கப்பட்டுச் சிறையிலே தள்ளப்பட்டிருப்பார்.

அன்று வீதியோரங்களிலே நின்று கொண்டு கலப்பு மணம் வேண்டுமென்று பேசினோம். இன்று காட்டிலே பல இடங்களிலே கலப்புமணம் நடைபெறுவதைக் காண்கிறீர்கள். பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டுமென்று பேசினோம். இன்று டில்லிவரை இதற்காகப் போராடுகிறார்கள். நம்முடைய மன எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது. மதுரையிலே சைவமதத்தை எதிர்த்தனர் என்ற காரணத்திற்காக 8000 சமணர்களை மதவெறியர்கள் கழுவேற்றினார்கள். இதனால் சமணர்கள் அழிந்துவிட்டார்களா என்ன?

வென்றது, வெல்வது அறிவு : அடக்கு முறையன்று

சர்க்கார் நம்மீது வீசும் அடக்குமுறை பெரிதல்ல. அடக்குமுறை ஆபத்தான கமட்டுமல்ல! அடக்குமுறை ஒரு விசித்திரமான சக்தி அதைக்கண்டு அஞ்சுபவர்கள் நாங்களல்ல. அடக்கு முறையைக் கொண்டே கட்சியை நடத்த முடியாது. மக்களை மடமையினின் றய மீட்போம், மனித சமுதாயத்தைப் பயம் என்ற சுடுகாட்டிலிருந்து வாழ்வு மாளிகைக்கு அழைத்துச் செல்லுவோம். “மனித உலகே எனது கடவுள். அதற்குச் சேவை செய்வதே என் மதம்” என்று முழக்கமிட்ட சாக்ரடீசுக்கு மதவெறி நச்சுக் கோப்பையைத் தந்தது, பரிசாக! ஆனால் அழித்தது மதவெறி, அதற்காக உயிர்விட்ட ஸாக்ரட்டீஸின் தத்துவமல்ல. உலகத்தைப்பற்றிய உண்மையை உணராத-