பக்கம்:அண்ணா கண்ட தியாகராயர்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


பிராமணர் வலதுகையில் செருப்பு இருப்பதாக யாரும் நம்புவதில்லை. ஆனால் அன்று பிராமணர்களின் வலதுகையிலே நெருப்பு இருந்ததாக சொல்லப்பட்டது. இன்றோ எல்லோர் உள்ளத்திலும் தான் அத்தகைய நெருப்பைக் காண்கிறோம். தியாகராயர் அன்று பிரிட்டிஷாரை எதிர்க்கவில்லை! அவர் சென்ற பாதை-பார்ப்பனரல்லாதார் சேவை-அன்று என் பயங்கரபாதையாக இருந்தது எனில் அது அந்தக் காலத்தில் செப்பனிடப்படாத, புதிய, பலர் சென்றறியாத பாதை. சாஸ்திரிகளின் சீற்றம் எனும் குழிகளும், ஆச்சாரிகளின் ஆத்திரம் எனும் அந்தகார வளைவுகளும், மற்றும் எதிர்ப்பு, ஏளனம், சாபம், சூழ்ச்சி எனும் பல்வேறு தொல்லைகளும் சர்.பி. தியாகராயர் சென்ற பாதையில் அடிக்கடி உண்டு. அது அவருக்குத் தெரியும். நன்கு தெரிந்துதான் அவர் அந்தப் பாதைவழிச் சென்று, சமுதாயப் புரட்சிக் கொடியைப் பறக்கவிட்டார்.

திராவிட வீரனே, விழி, எழு, நட!

தியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனீயத்துக்குப் பலியாகாதே என்பது தான். “மதத்திலே அவன் தாகு வேண்டாம், கல்வியிலே அவன் போதனை வேண்டாம், சமுதாயத்திலே அவன் உயர்வுக்கு உழைக்காதே, அரசியலிலே அவன் சூழ்ச்சிக்கு இரையாகாதே! திராவிட வீரனே, விழி, எழு, நட! உன் நாட்டை உன தாக்கு” என்றார் தியாகராயர். அன்று முதல் தியாகராயரின் உருவம் தென்னாட்டில் புரட்சியின் அறிகுறியாகிவிட்டது. இன்றோ நம்மிடம் பெரும்படையிருக்கிறது. பார்ப்பனீயத்தை எதிர்க்கும் பெரியபடை நம்மிடம் இருக்கிறது.

அவர் தூவிய விதை

அவர் களத்திலே தூவிய விதை நன்றாக வளர்ந்திருக்கிறது. அவர் அன்று பறக்கவிட்ட சமுதாயப் புரட்சிக் கொடியின் கீழ் நின்றுதாள் நாம் இன்று பணியாற்றி