பக்கம்:அண்ணா காவியம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

அண்ணா காவியம்


தேர்தலிலே அடுத்தாண்டு குதிப்பதற்குத்
தீர்ப்புளித்தார் மாநாட்டில் பங்கு கொண்டோர்!

ஊர்தோறும் பொதுக்கூட்டம் நடத்தி, மேலும்
உருவான கருத்துகளை அறிந்தார் அண்ணா!

"யார்தயவும் வேண்டா! நம் மக்கள் என்றும்
ஏழைப்பங் காளரென நம்மை நம்பி,

ஒர்தருணம் தந்துள்ளார்; முயன்று பார்ப்போம்!
ஒப்பற்ற மக்களாட்சி மாண்பு வெல்லும்!"




"தம்பீவா! தலைமையேற்க வா!"யென் றண்ணா...
தான்வளர்த்த தம்பியருள் ஒருவரான

நம்பிக்கை மிகவுடைய நல்ல தொண்டர்
நாவலரை அழைத்ததொரு வரலா றன்றோ!

சம்பத்து மீதிலொரு வதந்தி தோன்ற...
சரியாமல் நிலைத்துளதாய் அவரே சொன்னார்!

அய்ம்பத்தா றாமாண்டிற் கூறி னாலும்
அறுபதிலே மீறிவிட்டார்; பிரிந்து போனார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/118&oldid=1079782" இலிருந்து மீள்விக்கப்பட்டது