பக்கம்:அண்ணா காவியம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

அண்ணா காவியம்


தளர்ந்த கோயிலும் கிளர்ந்தெழுந் தண்ணா

அமிழ்தினும் ஆற்ற இனியநற் பெயரால்

தமிழ்நா டென்றார்; தமிழர் வாழ்த்தினர்!

தாய்க்கே பெயரைத் தகைமையாய்ச் சூட்டுமிச்

சேய்க்கினை யானவர் செகத்தினில் ஏது?

முதலைகள் போன்ற முதலாளிகளால்

பேருந்து வருவாய் பிறர்க்குதவ வில்லை;

நாட்டுடைமை யாக்கும் நல்லதிட் டத்தைப்

போட்டுக் காட்டினார் புதுமை தொடர்ந்ததே!

சென்னையை ஆண்ட முன்னவர் செய்த

தீமையின் உருவாய்த் திகழ்ந்தது கூவம்!

மூச்சு விடாமல் மூக்கைப் பிடித்துச்

சேச்சே என்றோர் சிரித்திடும் வண்ணம்

மணக்கும் கூவமாய் மாற்றிட வழிமுறை

கணிக்க உதவினார் கனிவுடன் அண்ணன்

அன்னை காவிரி சென்னை வரவும்,

பொன்னி நதியின் புகழ்நன் னீரை

அனைவரும் அருந்தி மனமகிழ் வுறவும்

இனியாதார் திட்டம் இயற்றித் துவக்கினார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/150&oldid=1080017" இலிருந்து மீள்விக்கப்பட்டது