பக்கம்:அண்ணா காவியம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வாழ்த்து


யானோர் தமிழன் என்பதால் விம்மி

ஏனோ நெஞ்சம் இறும்பூ தெய்தும்!

உலகில் முதன்முதல் உயிர்த்த மொழிகளுள்

சிலவே இன்றும் நிலவுந் திறத்தன.

தொன்மொழி, அவற்றில் துடிப்புடன் விளங்கும்

என்மொழி, தமிழ்தான்! எனவே மகிழ்வேன்!

நோய்நொடி ஆயிரந் துாய்மையைத் தகர்க்கினும்,

தாய்மொழி அவற்றைத் தாங்கிடுந் தகையது.

தன்னிற் பிரிந்து தனிக்குடி யாகிய

கன்னடந் தெலுங்கு துளுமலை யாளம்

தழைத்திடத், தானும் பிழைத்திடுந் தன்மையால்.

கிளைத்திடும் ஆறுகள் கேண்மையாய் நிரப்பித்

தன்புகழ் குறையாத் தடாநதி யாகிய

அன்புசால் காவிரி ஆற்றினைப் போன்றது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/25&oldid=1078549" இலிருந்து மீள்விக்கப்பட்டது