பக்கம்:அண்ணா காவியம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மனம் புனை காதை

ஈராண்டில் இணையற்ற திறமை காட்டி
இடைநிலையில் முதல்தரமாய்த் தேர்ச்சி பெற்றார்!

சீரான கல்விமுழு நிலைபெ றும்முன்,
சிறப்பாகப் பிள்ளைக்கு மணம்மு டிக்க

ஊராரின் வழக்கம்போல் தொத்தா எண்ணி
உடனடியாய்த் தஞ்சையிலே பெண்ணும் பார்த்துப்

பேராலும் பெரும்புகழ்சேர் இராணி என்ற
பெண்குலத்தின் பொன்விளக்கைக் கொண்டு வந்தார்!



திருமணத்தை முடித்தபோது தஞ்சாவூரின்
சிறப்புமிகு மாப்பிள்ளை ஆனார் அண்ணா!

பெருமிதந்தான் எமக்கெல்லாம்; எங்கள் மண்ணைப்
பெருமையுற வைத்தனரே என்பதாலே!

அருமையுடன் மகனுக்கு மணம்ந டாத்தி
ஆசையினை நிறைவேற்றிக் கொண்டார் அன்னை,

திருமகனார் கற்பதனை நிறுத்த வில்லை;
தீவிரத்தைக் காட்டினரே மிகவி ரைந்து!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/46&oldid=1078654" இலிருந்து மீள்விக்கப்பட்டது