பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

95


அமர்ந்து கொள்கிறார்! அவரைச் சமாதானம் செய்து பேச்சைத் தொடருமாறு சொல்கிறார்கள் அண்ணாவும் கலைஞரும். இந்தப் பரபரப்பான சூழ்நிலைக்குள், அண்ணா ஆட்பட்டிருந்த போதுதான் சிதம்பரத்திலிருந்து Trunk call வந்து அண்ணாவுடன் வில்லாளன் பேசிப் பணம் கேட்கிறார்?

அண்ணாவும் கலைஞரும் மேடையின் விலாப்புறம் சென்று கலந்து பேசுகிறார்கள். பிறகு என்னை அழைத்து வரச் சொல்லி, நான் சென்றதும் என்னிடம் தனியே பேசுகிறார் அண்ணா- ‘இதோ பார்! உன்னை ஒரு முக்கியமான வேலையாக இப்போது உடனே சிதம்பரத் துக்கு அனுப்புகிறேன். 10 நிமிடத்தில் தயாராக வா!” என்றார். டிக்கட் விற்பனைப் பொறுப்புகளை சண்முகத்திடம் தந்துவிட்டுத் திரும்ப அண்ணாவிடம் வருகிறேன். “கொஞ்சம் பணம் தருகிறோம். அதை எடுத்துச் சென்று பத்திரமாக வில்லாளனிடம் சேர்த்துவிட்டு, உடனே திரும் பிவிட வேண்டியதுதான். தனியே போவாயா?” எனக் கேட்கிறார் அண்ணா. கலைஞர் சொல்கிறார் “என்னுடைய காரை எடுத்துச் செல்லுங்கள், சார்” என்று. “சரி” என்ற ஒற்றைச் சொல்லில் பதில் தந்தேன்.

அப்போது கலைஞரிடம் இருந்தது. ஷெவர்லே கார். நிறையப் பெட்ரோல் சாப்பிடும் பெரிய, நல்ல கார். மணிக்கு 100 மைல் வேகம், சாதாரணமாகப் போகும். ரங்கசாமி ஒட்டுநர். காரில் ஏறப்போகும்போது, மீண்டும் அண்ணா அழைப்பதாகச் செய்தி வந்தது. இப்போது அண்ணாவுக்குப் பக்கத்தில் சேலம் தோழர் இராஜாராம் நின்றிருந்தார். அவர் அண்மையில்தான் திராவிடர் கழகத் திலிருந்து விலகி வந்தவர். “இந்தா, கருணானந்தம்! உனக்குத் துணையாக ராஜாராமை அழைத்துப் போ! வழியில் துTக்கம் வராமலிருக்கப் பேசிக்கொண்டே வருவார்” என்றார் அண்ணா.