பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

101


பொறுப்பு. நாளை அண்ணா டெல்லி செல்கிறார். நீங்கள் எழுதிவாங்கி என்னிடம் தந்தால்தான் வசூல் தொகையைச் சொல்வேன். அணிந்துரை வராவிட்டால் இதுவும் வராது” என்று உரிமையுடன் சொல்லிவிட்டேன்!

மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வேறு பேச்சாளர்கள் பேசுகிறார்கள். என் காதில் விழுகிறது. எனக்குள் டென்ஷனும் ஏறுகிறது. மேடையில் அமர்ந் திருந்த அண்ணா, ஏதோ எழுதுவதை, அங்குள்ளோர் கவனித்தார்களாம். பேசுவதற்கு முன்பு குறிப்பு எடுக்கும் பழக்கம் அண்ணாவுக்குக் கிடையாதே? என்ன எழுது கிறார் என்பது புதிராயிருந்ததாம்! கலைஞர் என்னுடைய நிபந்தனையை அண்ணாவிடம் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்லி, அணிந்துரை எழுதுமாறு செய்துவிட்டார் போலும் இடையூறு இல்லாமல் அண்ணா எழுது வதற்கும் கலைஞர் உதவியாயிருந்து, எழுதிய 5 காகிதங் களையும் சேர்த்துத் தென்னரசு மூலமாக என்னிடம் கொடுத்தனுப்பினார். அள்விலா மகிழ்ச்சிக்கடலில் அமிழ்ந்துபோன நான்-தயாராகக் குறித்து வைத்திருந்த டிக் கட்வசூல் மொத்தத் தொகை அளவைத் திரும்ப அவரிடமே தந்தனுப்பினேன்.

அந்த அணிந்துரையின் தொடக்கமே, அண்ணா என்னை நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் சிறப்புரையாகும்;

ஆனந்தம் என்பார் எனதருமை நண்பர்.
அருங்குணத்தின் பெட்டகம்
அன்னைமொழி எனும்
அணிகலனைப் பூண்ட அழகு நெஞ்சினர்.
அலுவலகத்தில் அஞ்சல் அனுப்பும் பணியாளர்.

அடுத்த சில வரிகட்குப் பின்னர், நான் எப்பேர்ப்பட்ட கவிஞன் என விளக்குகிறார்!