பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

அண்ணா—சில நினைவுகள்


ஒவியர்கள் உட்பட உழைப்பவர் அனைவர்க்கும், அருகிலேயே எளிய உணவுக்கு ஏற்பாடு. சம்பளம் யாருக்கும் கிடையாது. எடுபிடி ஆள் கிடையாது. எல்லாம் நாங்களே. நானே!

இந்தி எதிர்ப்புப் போராட்டம் முக்கிய இலக்கு! மிகமிகப் பெரிய பேனரில் போலீசார் துப்பாக்கிச்சூடு, சின்னச்சாமி முதலியோரின் தீக்குளிப்புக் காட்சிகள், அப்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் உருவங்கள், செயல்கள். பாளை தனிமைச் சிறை. இப்படியாக மக்களின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கவல்ல. கணக்கற்ற ஒவியங்கள், சிற்பங்கள், பல நிறங்களில் உருப்பெற்றன.

இடையிடையே நான் விருகம்பாக்கத்துக்கு ஓடுவேன். என் நண்பர் நீலநாராயணன்தானே வரவேற்புக்குழுத் தலைவர். அவருக்கு உதவியாக அங்கேயே தங்கியிருந்தார். கோ. செங்குட்டுவன். இவர்களோடு கலந்து, பந்தல், முகப்பு, அலங்காரம், சோடனை ஆகிய பணிகளிலும் என் பங்கினைச் செலுத்துவதையும் நான் நிறுத்தவில்லை. அப்படியாக ஒரு காலைப் பொழுதில், என்னோடு நீல நாராயணனும் அண்ணாவைக் காண வந்தார். நான் விரைந்து மேலே ஏறி, அண்ணா படுத்திருந்த அறைக்குள் நுழைந்த போது, அண்ணா தூங்கவில்லை; உட்கார்ந்திருந்தார் வெற்றுடம் போடு! நான் மட்டுந்தான் வந்திருப்பதாக எண்ணி “எங்கேய்யா அந்த நீல நாராயணன்?” என்று கேட்ட வேகத்தைப் பார்த்து, அவர் என்னோடு வந்ததையே சொல்லவில்லை. அவரும் மாடிப்படியிலேயே நின்று, மறைந்திருந்து, அண்ணாவின் குரலை மட்டும் கேட்கிறார்!

“என்னய்யா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க நீங்கள் எல்லாரும்? நான் ஒருத்தன் இங்கே இருக்கிறேனல்லவா? எனக்குத் தெரியாம, எனக்குப் பிடிக்காத சங்கதியைச்