பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

5


முதல் நாள் மாலை திடீரென்று பயங்கர மழை பிடித்துக் கொண்டது. பந்தலுக்குக் கீழே சேறாகிவிட்டது. ஆற்று மணல் லாரிகளில் கொண்டுவரப்பட்டது. அதற்கிடையே, உள்ளே தேங்கும் தண்ணிரை வெளியேற்றினால் நல்லது என்றார் அண்ணா. தொண்டர்களாகிய நாங்களே செயலில் இறங்கினோம். நாடகம் நடத்த வந்திருந்த எம். ஆர். ராதா, தனது பேண்ட்டை முழங்காலுக்கு மேல் மடித்துவிட்டு, ஒரு மண்வெட்டியுடன் வேலை தொடங்கினார். எனக்கு அந்தத் தொல்லையில்லை. நான் எப்போதுமே Pant அணிந்ததில்லை. வேட்டிதான். Shoes அணிந்ததுமில்லை. செருப்புதான். ஆகவே வேட்டியை வரிந்து கட்டித் தலையில் முண்டாசுடன் பணியாற்றினேன். ஒரளவு திருப்தி ஏற்பட்டது. தயார் செய்து முடித்து விட்ட அயர்வுடன் மேடையின் ஒரத்தில் அண்ணாவின் அருகே அமர்ந்தேன். நானே அண்ணாவிடம் ஆரம்பித்தேன். அண்ணா! நாளைக்கு இந்தமாநாட்டுக்கு நம்ம திருவாரூர் கருணாநிதியை வரச் சொல்லியிருக்கேன். மாநாடுகள் முடிந்து நாங்கள் அய்யாவுடன் ஈரோடு திரும்புறப்ப, அவரையும் அழைச்சிட்டுப் போயிக் குடி அரசில் சேர்த்துடாலாம்ணு, அய்யாகிட்ட அனுமதி கேட்டேன். சரி, வரச்சொல்லுண்ணார் அய்யா. அவரை ஈரோட்டுல வச்சிட்டு, நான் கொஞ்சம்திருத்துறைப் பூண்டி போகலாம்னு இருக்கேன், பெற்றோர்கிட்டே.”

“நல்ல வேலை செஞ்சே. ஏன்?”

“ஒண்ணு, படிப்பைத் தொடர்ந்துமுடிச்சிப் பட்டதாரி ஆகனும் இல்லே, ஏதாவது உருப்படிப்ான் வேலை தேடிக்கணும்மிண்னு அப்பான்முதியிருக்காங்க!”

அது ஞாயந்தானேய்யா! இவ்வளவு மாசம் ஒன்னெ இங்க இருக்க அனுமதிச்சதே உங்கப்பாவோட பெருந்தன்மைதானே! நீ எவ்வளவு காலம் ஈரோட்டில் இருந்தாலும் அய்யா கூசாமெ சாப்பாடு போட்டுவிடுவார். ஆனா, எத்தனை காலத்துக்கு நீ அப்படியே இருந்துட