பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

187


இதேமாதிரியான இன்னொருவித முறையை, ஏற்கனவே ஒரு நண்பர் கையாண்டார். அதாவது தென் சென்னைத் தொகுதியில் நாடாளுமன்றத்துக்கு அண்ண்ர் போட்டியிட வேண்டும் என்று கழகம் தீர்மானித்தது. அண்ணாவுக்கு வழிவிடும் பொருட்டு நாஞ்சில் மனோகரன் தென்சென்னையிலிருந்து மாறி, வட சென்னைத் தொகுதியில் போட்டியிடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டு விட்டது. இவ்வளவுக்கும் பிறகு, நுங்கம்பாக்கம் அவென்யூ தெருவில், நாள்தோறும் ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் வரிசையாக அணிவகுத்து நிற்பதும், விண்ணப்ப மனு ஒன்றை அண்ணாவிடம் அளிப்பதும் வழக்கமாகியிருந்தது. என்ன கோரிக்கை என்றால், ‘எங்கள் தொழிற்சங்கத் தலைவர் எஸ். இராகவானந்தம் அவர்களுக்குத் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி தரப்பட வேண்டும்’ என்பது!

இதனால் எங்கள் எல்லாருக்கும் தாங்க முடியாத எரிச்சல் ஏற்பட்டது. “என்னய்யா, இப்படியெல்லாம் Irritate செய்கிறதா? தொழிற்சங்கத்தின் வேலையிதுவா? இது நமக்கெல்லாம் புரியாத் வேலையா? நம்மையெல்லாம் தற்குறி என்று நினைத்துக் கொள்வதா?” என்று அண்ணர் ஒருநாள் வேதனையை, வெளிப்படுத்தினார். 1960-களில் மிகவும் தாமதமாக தி. மு. கழகத்தில் நுழைந்த ஒரு தோழரின் கைங்கர்யம் இது. அவர் அத்துடனில்லாமல் கலைஞரிடம் நேரிலேயே கேட்டார்-“அண்ணா எங்கு வேண்டுமானாலும் நின்று ஜெயிக்கலாம். நான் தென் சென்னையில் மட்டுமே நிற்க முடியும். அதனால் எனக்கே தரப்பட வேண்டும்” என்று. கலைஞர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று யூகிக்கலாமே

Black Prince of Annamatai – அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கருப்பு இளவரசன் என்று பெயர் பெற்ற கடலூர் இரெ. இளம்வழுதி-வழக்கறிஞர். அவர்