பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

221


பொது நிகழ்ச்சி துவங்கிற்று. அரூர்முத்து, சி.கே.சி., இராகவானந்தம், ம.பொ.சி. ஆகியோர் பேசியதும், நான் அண்ணாவின் உடல் 104டிகிரி சுரத்தினால் துன்பமுறுவதை எடுத்துச் சொல்லி, கூட்டம் அத்தோடு முடிவுறுவதாக அறிவித்தேன். மக்கள் கூட்டமும் கரையத் தொடங்கியது. அந்த நேரத்தில்......

“அண்ணா வாழ்க! அறிஞர் அண்ணா வாழ்க!” என்று வெளியே இடைவிடாத முழக்கம் செவிகளில் நிறைந்தது. பரபரப்புடன் வாயிற்புரம் நாங்கள் வருவதற்குள் ஒரு fiat காரிலிருந்து அண்ணா இறங்குகிறார். உடன் சி. வி. ராசகோபால் மாத்திரம்!

ஒரு வார இளைப்பும் களைப்பும், சுமார் 150 மைல் கார் பயண அலுப்பும், முகத்தில் தாடி மீசையும், வாரப்படாத கலைந்த தலையும், மேலே கம்பளிச் சால்வையுமாய் அண்ணாவைப் பார்த்ததும், கண்கள் கலங்கிவிட்டன. வாருங்கள் அண்ணா என மகிழ்வோடு வரவேற்பதற்கு மாறாக, அனைவரும் ஒரே குரலில் ஏன் அண்ணா வந்தீர்கள்?’ என்று அச்சத்துடன் கேட்டோம். திரும்பிப் போய்க்கொண்டிருந்த மக்கள் மீண்டும் விரைந்து ஓடோடியும் வந்து அமர்ந்தனர். முடிவுற்ற கூட்டம் மீண்டும் துவங்கியது.

“நான் எந்த வேலையை எப்போது சொன்னாலும் தட்டாமல் செய்பவர் என் தம்பி கருணானந்தம். அவர் அழைத்து இதுவரை நான் வரத் தவறியதே இல்லை. அதனால்தான், இப்போதும், என் காய்ச்சலுக்கிடையிலும் வந்தேன்” எனத் தொடங்கி, “இவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் புரட்சி செய்ய வேண்டும் என்று முந்திய மாநாட்டிலேயே யோசனை சொன்னேன். எத்தகைய புரட்சி என்பதை அப்போது சொல்லவில்லை. அதை இப்போது சொல்கிறேன். அந்தப் புரட்சி, நாம் கோரு