பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

அண்ணா-சில நிலைவுகள்


அடுத்த நாள் திருச்சியிலிருந்து விரைந்த பெரியார், இரவு சுமார் 11.30 மணியளவில் வந்து அண்ணாவைப் பார்த்தார். அங்குள்ள மருத்துவ நிபுணர்களை நோக்கி “அய்யா! தமிழ்நாட்டின் நிதி போன்றவரை உங்களை எல்லாம் நம்பி ஒப்படைக்கிறோம்” என்றார் பெரியார், கண்கலங்க!

10.ந் தேதியே அண்ணா அமெரிக்கா புறப்பட வேண்டும் என மருத்துவர்களால் நாள் நிர்ணயிக்கப் பட்டது. இதைக் கேள்விப் பட்டதும் சுற்றுப் பயணத்திலிருந்த பெரியார் உடனே சென்னை திரும்பி, Wheel chair-ல் அமர்ந்து G, H. வந்து சேர்ந்தார். அவரோடு தவத்திரு குன்றக்குடி அடிகளார், மணியம்மையார், வீரமணி, சம்பந்தம், புலவர் இமயவரம்பன் இருந்தனர். குன்றக்குடி அடிகளார் கொண்டு வந்திருந்த பொன்னாடையை வாங்கி, அண்ணாவுக்குப் போர்த்தினார் அய்யா.

பெரியார் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே, அண்ணாவின் வலது காதருகே குனிந்து, தம் வாயைக் காதில் வைத்து, ஏதோ சொன்னார். பிறகு தம் மடியை அவிழ்த்து எதையோ எடுக்க முனைந்தார். அண்ணா, கையைக் கலைஞர் இருந்த திசையில் காட்டி, முகத்தில் புன்சிரிப்பைத் தவழவிட்டு, “கருணாநிதி கிட்டெ சொல்லுங்க அய்யா” என்றார் மெல்லிய குரலில். மறுபுறம் நாற்காலியைத் திருப்பி, அய்யா கலைஞரின் கழுத்தில் தன் கையை வைத்து, அவர் தலையை வளைத்து, அருகே இழுத்து, இதிலெ இருவத்தஞ்சாயிரம் (ரூ. 25,000) பணம் இருக்குது. அண்ணாவுக்கு வைத்திய செலவுக்கு வச்சிக்குங்க!” என்றார். “இப்பப் பணம் இருக்குங்க அய்யா! அப்புறம் பாத்துக்கலாம்! நன்றி!” எனக் கூறினார் கலைஞர்.

சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஈயாதவர், கொடாதவர், கஞ்சத்தனமுள்ளவர், செட்டானவர், கருமி,