பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அண்ணா—சில நினைவுகள்


நடராசன் தவிர் வேறு யாருடைய பெயரும் இதுவரை “தினத்தந்தி", “மாலை முர”சில் வந்ததில்லியே.”

“நாம ஒரு கட்சியாயிருந்த வரையில் நாமும் தமிழ் நாட்டுப் பத்திரிகைகளைப் பொருட்படுத்தியதில்லை. கையகலம் உள்ள குடியரசு, திராவிடநாடு, முரசொலியை விச்சிதான் முன்னேறினாம். ஆனா இப்ப நம்ம ஆட்சி நடக்குது வரி செலுத்தும் மக்களுக்கு நம் ஆட்சி என்ன செய்யிது என்கிறதை எடுத்துச் சொல்ல நிறையப் பத்திரிகை வசதி வேணும். இவரிடம் 13 பத்திரிகை இருக்குது. என்ன சொல்றே? இவர் நமக்குத் தேவையா இல்லியா?”

“இப்பப் புரிஞ்சுக்கிட்டேன். ஆனாலும் இவர் பேசறதைப் பாத்தா, இவர் லட்சியமே மந்திரியாகுறது ஒண்ணுதானோண்ணு சந்தேகம் வருது! இவர் பத்திரிகை பலம் நமக்கு உதவுது சரி; ஆனா, பத்திரிகையேயில்லாதவர் ம.பொ.சி. அவர் காலமெல்லாம் நம்மை எதிர்க்கவே கட்சி உண்டாக்கினார். நம்மைச் செய்யாத கேலியில்லை. அவரை எதற்காகச் சேர்த்துக் கொண்டீர்கள்?”

“அதிலேதான் கொஞ்சம் ஏமாற்றம் எனக்கு. அவரிடத்திலே நல்ல பேச்சாளர்கள் பத்துப்பதினஞ்சு பேர் இருந தாங்க, அவுங்க நமக்காகப் பிரசாரம் செய்வாங்கண்ணு எதிர்பாத்தேன். ஆனா, இவர் நம்மோட சேர்ந்ததும், அவுங்க அத்தனை பேரும் இவரெத் தனியா விட்டுட்டுப் வோய், வேற கட்சி ஆரம்பிச்சிட்டாங்க-”

(புலவர் கீரன், கவிவரதன், சந்தானம் போன்றாரை மனத்தில் வைத்து அண்ணா சொல்லியிரு க்கவேண்டும். அண்ணா இருந்த வரையில் ஆதித்தனார் சட்டப் பேரவைத் தலைவராகவும், சிலம்புச் செல்வர் சட்ட மன்ற உறுப்பினராகவும்தான். நீடித்தனர். அண்ணா இவர்களை அமைச்சரவையில் சேர்த்து விடப்