இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
6
அப்படித்தான் அந்தச் சுடர் பொன்னொளி வீசி
எரிந்து கொண்டிருக்கிறது!
அண்ணா ஜோதி-அதன் பெயர்! அந்த இளை
ஞனின் பனியனில் அப்படி எழுதியிருக்கிறது!
எங்கள் காரைக் கூடத் திரும்பிப் பார்க்காமல்
அந்தக் காளை, கரூர் நோக்கி ஓடிக்கொண்டிருக்
கிறான்.
.
"வீராசாமி! துரைமுருகா! கண்டீர்களா; இந்தக்
கழகக் கண்மணியை? என்று கேட்கிறேன்!
66
'ஆமாம்! எப்படி வியர்க்க வியர்க்க ஓடிக்
கொண்டிருக்கிறான்" -என்கிறார்கள்!
வியர்வை அருவியெனக் கொட்டுகிறது! அந்த
அருவியை பூமிக்கு அனுப்பும் மலைத்தோள்கள் அந்த
மாவீரனுக்கு!
"இவன்தான் கழகத்தின் உயிர்! இனமானத்தின்
நாடித்துடிப்பு! இவனுக்கு முன்னால் நானும் நீங்களும்
தூசு! என்று உணர்ச்சி பொங்கிடக் கூறுகிறேன்.