பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டிற்கோர் புத்தகசாலை



சி. என். அண்ணாத்துரை.

உலகிலே எங்கேனும் ஓரிடத்தில் ஏதோ ஓர் காரணத்தால் நேரிடும் ஏதோ ஓர் சம்பவம், உலகின் மற்றப் பாகங்களைப் பாதிக்கும் நாட்களில் நாம் வாழ்கிறோம். பாஸ்தீனத்தில் போர்; அது பற்றிய வாதப்பிரதிவாதம், பாளையங்கோட்டையில் இத்தாலியில், எலக்ஷன் என்றால், இங்கு எந்தக் கட்சி அங்கு வெற்றி பெற வேண்டும் என்பது பற்றி விவாதம். உலகத் தொடர்பு அதிகரித்து விட்ட வளர்ந்து கொண்டே போகும் நாட்களிலே நாம் வாழ்கிறோம். வாழ்கிறோம் என்றால் நமது வாழ்வையும் நாட்டின் வாழ்வையும் வளமாக்கும் பெரும் பொறுப்பை ஆயிரம் மைலுக்கப்பாலிருந்து வந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டல்ல. யார் சிரத்திலே மணிமுடி ஜொலிக்கிறது; எவர் கரத்திலே உடைவாள் மின்னுகிறது என்று பார்த்து, ஆட்சிப் பொறுப்பை அப்படிப்பட்டவர்களிடம் ஒப்படைத்துவிட்டு மல்ல. ஆட்சிப் பொறுப்பை மக்கள் ஏற்றுக்கொண்டு நாட்டில் நாயகர் நாங்கள் என்று மார்தட்டிக் கூறிக்கொண்டுள்ள நிலை இருக்கிறது. உலகுக்கு இது நன்கு தெரியும். உலகின் கவனம் நமது நாட்டின் பக்கம் நன்றாகத் திரும்பும்படியான முறையிலும், அளவிலும் நாம் நமது நாட்டின் சிறப்புப் பற்றியும், நமது ஆற்றலைப் பற்றியும் பாட்டு மொழியிலே பேசிவிட்டோம் சற்று அதிகமாகவேகூட. “என் நாடு பொன்னாடு, எது இதற்கோர் ஈடு” என்று திருப்புகழ் பாடினோம். இங்கு வானை முட்டும் மலைகள், வற்றாத ஆறுகள் வளமான வயல்கள், கனி குலுங்கும் சோலைகள் ஏராளம்; முத்து உண்டு எமது கடலில்; தங்கம் உண்டு எமது பூமியில் என்று ஆனந்தக் களிப்புச் சிந்து பாடியிருக்கிறோம். எல்லாம் சரி; உமது நாட்டுக் கவில் நிலையைக் கூறு என்று கேட்டால், நாம் வெட்கித் தலை குனியும் நிலையில் இறுக்கிறது. வேத வேதாந்திகள், சித்தாந்தி, சிரோமணிகள் திரு அருளைப் பெற்றவர்கள் எமது நாட்டிலே உண்டு என்று