7
படாது. நமது நாட்டை வஞ்சகர்களுக்கு ஏற்ற வேட்டைக்காடு ஆக்கும் தீக்குச்சி சேர்ப்பது போலாகும்.
உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படு அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து, அதற்குப் புத்தகசாலையென்று பெயரிடுவது, குருடர்களைக் கூட்டி வைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழிகாட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளிக் கூத்தாக முடியும்.
ஒவ்வோர் வீட்டிலும், வசதி கிடைத்ததும், வசதி ஏற்படுத்திக் கொண்டதும், அமைக்க வேண்டிய புத்தகசாலையில், நாட்டு வாலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள், இவை முதலிடம் பெறவேண்டும். பொதுவாகவே, மக்களின் அறிவுக்குத் தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்கவேண்டுமே யொழிய, வாழும் இடத்தை வகையற்றது என்று கூறி, வானவீதிக்கு வழிகாட்டும் நூல்களும் மாயாவாதத்தையும், மனமருட்சியையும் தரும் ஏடுகளும் தன்னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்திப் பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூல்களும் இருத்தலாகாது.
பஞ்சாங்கம் அல்ல, புத்தகசாலையில் இருக்கவேண்டியது அட்லாஸ்—உலகப்படம் இருக்கவேண்டும்.
இந்த அடிப்படை பிரச்சினையிலே நேர்மையான முறையையும், நெஞ்சு உரத்தையும் காட்டியாகவேண்டும். அப்போதுதான் வீட்டிற்கோர் புத்தகசாலை அமைப்பது என்பது அறிவுத் தெளிவுக்கு வழி செய்யும்—மனவளத்தை உண்டாக்கும்—நாட்டை வாழ வைக்கும். புலியை அழைத்துப் பூமாலை தொடுக்கச் சொல்ல முடியாது. சேற்றிலே சந்தனவாடை கிடைக்குமென்று எண்ணக்கூடாது.
நமது பூகோள அறிவு, பதினான்கு லோகத்தைக் காட்டிற்று அந்த நாட்களில் நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத்தேவை என்று கூறிற்று அந்த நாட்களில். நமது சரித்திர அறிவு,