பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


விதி என்றும், சப்மரைன், டார்பிடோ, விமானம், விஷப்புகை வெடிகுண்டு இவைகளைப் போன்ற படைக் கலங்களைக் கொண்டு இல்லை. அப்படிப்பட்ட படைக்கலங்களைக் கொண்ட ஒரு ஏகாதி பத்தியத்தின் பிடியிலிருந்து விடுபட்ட நமக்கு, இந்த நாளில் சாதாரண ஏடுகள்—அதிலும் காலமெனும் செல்லரித்த ஏடுகள், அவைகளிலே காணப்படும் கருத்துக்குக் குழப்பம் தரும் கற்பனைகள், அந்தக் கற்பனைகளை நம்பிப் பிழைக்கும் கபடர்கள், ஆகிய இவ்வளவு படைக் கருவிகளை மட்டுமே கொண்டுள்ள விதிக்கு அடிமைத்தனம் என்னும் பழமையை முறியடிப்பது முடியாத காரியமல்ல; ஒரு பலமான தாக்குதல்—அறிவுப் பணிபுரியும் பலரும் கொண்ட ஒரு கூட்டுப் படையினால் ஒரு அறப்போர்—ஒரு தன்னலமற்ற முயற்சி எடுத்தால் நமது நாட்களிலேயே மக்கள் வாழ்விலே நஞ்சு கலக்கும் இந்த அடிமைந் தளையை வீழ்த்த முடியும்—புது வாழ்வு மலர முடியும். செய்வோமா?


இவ்வரிய சொற்பொழிவைப் புத்தக வடிவாக்க உரிமை தந்த திருச்சி வானொலி நிலையத்தாருக்கு எமது நன்றி.