5
வியைப், பிறவி காரணமாகவே பெற்று விடுகிறான்—அறிவால் அல்ல—ஆற்றலால் அல்ல— நற்பண்பினால் அல்ல. இந்த நிலை இருக்கும் வரையில், சுதந்தரம் தழைக்காது. மக்களின் சுதந்தரம் காக்கப்பட வேண்டுமானால், மக்களாட்சி ஏற்படவேண்டும். ஓநாயைச் சாதுவாக்கி ஆட்டுக்குக் காவல் வைக்கவும் முடியாது. உருத்திராட்சம் அணிந்தாலேயே பூனை, போதகாசிரியனாகிவிடாது என்று கூறினர். மக்களை மக்களே ஆளவேண்டும். மக்களிடமிருந்தே சகல அதிகாரமும் பிறக்கிறது. மக்களுக்காகத்தான் ஆட்சியே தவிர, ஆட்சி செய்பவர்களின் அட்டகாசத்துக்கு இரையாவதற்காக, மக்கள் இல்லை, என்று பேசினர் மக்களாட்சி அமைக்கப்பட்டது.
மக்களாட்சி அமைக்கப்பட்ட பிறகுதான், ஆட்சிக்கு வருமுன்னம் மக்களுக்கு இன்னின்ன நன்மைகள் செய்கிறோம்; தொழிலை வளமாக்க, செல்வத்தைப் பெருக்க, புதிய பல திட்டங்கள் உள்ளன என்று பேசவும், ஆசைக் காட்டவும் முன் வந்தனர். கட்சிகள் ஏற்பட்டன. மக்கள் மன்றத்திலே இடம் பெறும் முறை அமைக்கப்பட்டது. ஆட்சி மன்றம் ஏறு முன்னம் “அன்பரே! நண்பரே! ஆருயிர்த் தோழர்களே! எமக்கு ஆதரவு தந்து யாரும் வரி குறையும்; வளம் அதிகரிக்கும்—காடு மேடுகள் வயலாகும்; காட்டு முறை ஒழியும்; இரும்புத் தொழிலும் ஏனைய தொழில்களும் எங்கும் ஓங்கும்—வறுமை நீங்கும். வாட்டம் தொலையும்—தேனும் பாலும் தெருவெல்லாம் ஓடும்—என்று பலப் பல பேசிவிட்டு—மமதை கொள்ளமாட்டோம். மக்களை மதித்து நடப்போம்; சீறிடமாட்டோம் ; மக்களின் சித்தத்தின்படி நடப்போம்—ஊராள வந்து உறுமிக்கொண்டிரோம், உமது நன்மை ஊழியராக இருப்போம்; அடக்குமுறை வீசோம்; அன்பு நெறியைக் கொள்வோம்” என்று இன்பமொழி பலபேசி—ஆட்சிமன்றம் ஏறிய பிறகு, புருவத்தை நெறிக்கவும், கையை விரிக்கவும், முடுக்காக நடக்கவும், மக்களின் உரிமையை நசுக்கவும் முனைந்தால், மக்கள் மனவேதனையடைவர். அந்த வேதனையைத் தீர்த்துக் கொள்ளவும், அதிகார வெறி கொண்டோரை அடக்கவும், அடுத்த தேர்தல் வரட்டும் வரட்டும் என்று கூறிக்கொண்டு, நாள் எண்ணிக்கொண்டு