6
என்பது போன்றது. கட்டடம் அமைக்கும் கடினமான காரியத்துக்கு, அதற்கான திறமை வாய்ந்த கட்டட வேலைக்காரர் தேவைப்படுவதுபோலச் சில குறிப்பிட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஸ்தாபனத்தை அமைக்க, திறனும் உறுதியும் கொண்ட அமைப்பாளர் தேவை. அந்த அமைப்பாளருக்குத், தாம் எந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொள்வது என்று கண்டறியும் திறனும், கட்டடக் கட்டுக்கோப்பு முறையிலே, ஸ்தாபனம் இருக்கவேண்டும் என்ற நோக்கமும் நிச்சயமாகத் தேவை. வலிவுள்ள இரும்பு கர்டர்களும், வகை வகையான மரச்சாமான்களும், உயர்தரமான சிமிட்டியும், அழகான பித்தளைக் குமிழ்களும், அறைத்தெடுத்த சுண்ணாம்புக் குழையலும் தேவை. ஆனால், இவைகளை எங்கெங்கு எந்தெந்த அளவில், எந்தெந்த முறையில் உபயோகித்தால், கட்டடத்தின் கட்டுக்கோப்பு சிறந்த முறையிலும் உறுதியும் பயனும் மிகுந்த முறையிலும் இருக்கும் என்பதை அறிந்து அமைக்கும் அமைப்பாளர்கள் தேவை—அவர்களால்தான் ஸ்தாபனங்கள் நல்ல முறையிலே அமையும். அமைந்த பிறகும், கட்டுக்கோப்பு கெடாதபடி பார்த்துக்கொள்ளும் திறம் இருக்கவேண்டும்—அக்கறையும் இருக்கவேண்டும்.
பெரியதோர் மாளிகையில், ஒரு சிறிய ஜன்னல் அவ்வளவு முக்கியமானதல்ல—அந்த ஜன்னல் இல்லாமற்போனாலும், மாளிகை இருக்கத்தான் செய்யும். அடிப்படையும் குறுக்குச் சுவரும், மேல் அமைப்பும் சரியாக இருக்குமட்டும், ஜன்னல் இருந்தாலும் எடுபட்டாலும், கெட்டாலும், மாளிகைக்கு ஒரு சேதமுமில்லை. ஆனாலும், மாளிகையிலே அக்கறையுள்ளவர்கள், அந்தச் சிறு ஜன்னலைக் கூடத்தான் கவனித்துக் கொள்வார்கள்—கெடாதபடி ஜன்னலை மட்டுமல்ல; அதன் கம்பிகளிலே ஒன்று கெட்டாலும், கவலைப்படுவர். ஏனெனில், ஜன்னலின் கம்பி கெட்டு, பிறகு அது எடுபட்டு, அதன் பலனாக ஜன்னல் கெட்டுக், கள்ளனோ காற்று மழையோ உள்ளே புகுந்து அதன் விளைவாக மாளிகைக்கு நஷ்டமும் கஷ்டமும் ஏற்பட்டுவிடக்கூடுமே என்ற யூகம், மாளிகைக்காரருக்கு இருக்கும். எனவே, அவர் ஜன்னலின் கம்பி, மாளிகையின் அடிப்படை அல்ல என்ற போதிலும், அதனையும் தான், அக்கரையுடன் கவனித்துக்கொள்வர்; ஸ்தாபனங்களிலும் இதுபோலத்தான். தொழிற் ஸ்தாபனங்களின் ஐக்கியமும் பலமும் கெடா திருக்க வேண்டுமானால், ஜன்னல் கம்பியையும் ஜாக்கிரதையுடன் கவனிக்கும் மாளிகைக்காரர்போல், ஸ்தாபனத்தின் சகல உறுப்பினரையும் கவனித்து, கட்டுக்கோப்பு கெடாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். இந்த முறையைக் கவனியாததால், தொழி-