பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


தொல்லைகள் பலப் பல, அவைகளைச் சரி செய்யும் பொறுமைக் குணம் கலந்த நெஞ்சு உரம் வேண்டும். இவைகளுக்காக மனப்பாங்கு வாலிபர்களுக்குத் தேவை.

எதிரி ஓர் மாயாவி. கண்ணுக்கே தெரியமாட்டான். தெரியத் தொடங்கும் போதும் ஒரு உருவில் அல்ல, பல உருவங்களிலே, தோன்றுவான். “அடுக்குமடா இந்த அக்கிரமம்?” என்று சீறிக் கேட்கும் ஆசிரியர் ரூபத்திலே. “மகனே!...ஏனோ இப்படி எங்களை வதைக்கிறாய்?” என்று அழுத கண்களுடன் நின்று கேட்கும் அன்னை உருவில், “பாபி, என் முகத்தில் விழிக்காதே” என்று ஆத்திரத்துடன் தந்தை உருவில், “சே, தறுதலையாகிவிட்டான் இந்தப் பயல்” என்று வெறுத்துப் பேசும் பெரியவர் ரூபத்தில். “மகாப் பெரிய மேதாவி” இவர் புதிதாக் கண்டு பிடித்துவிட்டார் என்று கேலி பேசும் நண்பர் உருவிலே. இப்படியெல்லாம் காட்சி அளிப்பான் அந்த மாயாவி—அதாவது பழமை, அதை எதிர்த்துப் போரிட, உறவு கொண்டாடி ஆசைமொழி கூறுமானால், அதிலே மயங்காதிருக்க வாலிபர்களுக்குத் திறமை தேவை.

நம்மைச் சுற்றி என்ன காண்கிறோம் இன்று. அதோ மெருகு குலையாத மோட்டார் ஓடுகிறது, நாகரிகத்தின் சின்னம். உண்மை; உள்ளே உல்லாசச் சீமான். செல்வம் சுகம்; சுகத்துக்காகச் செல்வம்; சுகப்பட்ட செல்வவான். சரி, மோட்டார் ஓடட்டும்; அதோ எதிர்ப்புறம் காண்பதென்ன? மாட்டுக்குப் பதில் மனிதன் மார்பு உடைய இழுக்கிறான் பாரவண்டியை ஏழ்மை உழைப்பு. உழைப்பவன் ஏழை, உல்லாசச் சீமான் மோட்டாரில் செல்கிறான். சல்லாபியின் வீட்டுக்கோ—இல்லை—சாம்ப மூர்த்தி சன்னதிக்கோ.

இந்தக் காட்சி சுதந்தர இந்தியாவில் இருந்துதான் தீருமா? அதோ ஓர் கூட்டம்; ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்புப் பற்றிய பிரசங்க பூஷணம் பேச்சானந்தர் சரமாரியாகப் பேசுகிறார். பேசட்டும் காண்பதெல்லாம் மாயை, பூண்பதெல்-