பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


லாம் மாயையேகாண். பாடுகிறார், கல்யாணி ஆலாபனம். கைவிரலிலே கவனியுங்கள், ப்ளூ ஜாகர் வைரம், பக்கத்திலே வெள்ளிச் செம்பு, கற்கண்டு பொடி போட்டுக் காய்ச்சிய பசும்பால் உள்ளே. பேசும் பொருள் கவனமிருக்கிறததோ? மாயா வாதம்.

சுதந்தர இந்தியாவிலே இது இருக்குமா?

சீமான் ரசித்தார். மாயாவாதப் பிரசங்கத்தை—வீடு வந்தார்—வேலையாள் அவருடன் வந்தவன், ஒரு அடி பாட்டிலே கற்றுக்கொண்டான். மெல்லிய குரலிலே பாடுகிறான்.

“காயமே இது பொய்யடா,” என்று...எஜமானர் காதிலே இது விழுகிறது. அவர் உரத்த குரலிலே கூப்பிட்டுக் கட்டளையிடுகிறார்.

“கதவை இழுத்துச் சாத்தடா” என்று. சுதந்தர இந்தியாவிலேயும் இது இருக்குமா? அடே அப்பா, கொஞ்சம் விலகு, மேலே படாதே எட்டி நில். இதுவும் இருக்குமா?

என் குலம் என்ன, கோத்திரம் என்ன? அந்தஸ்து என்ன? என் மகளை, அந்தப் பயலுக்கா கொடுக்க முடியும்? நான் என்ன ஜாதி? அவன் என்ன ஜாதி? இந்தச் சீற்றம் இருக்குமா, சுதந்தர இந்தியாவில். இன்று காணப்படும் சகலமும் அங்ஙனமே இருப்பதற்காக அல்ல வாலிபர்கள் பாடுபட்டது. சுதந்தரம் என்றால், இத்தகைய கோரங்கள் ஒழிக்கப்பட்ட நிலை என்பதே முழுப்பொருள். இதற்கான பணிபுரிவதற்கு நெஞ்சில் உரம் தேவை வாலிபர்கட்கு. மனிதன் மனிதனாக வாழ வழி கண்டு பிடிக்கும் மகத்தான வேலை, வாலிபர்கள் முன் இருப்பது. நாட்டின் இயற்கை வளத்தையும், மக்களின் மன வளத்தையும் பெருக்கும் பெரும் வலி இருக்கிறது. புதிய வாழ்வு அமைக்கும் பொறுப்புள்ள வேலை. இதற்குப் பல பொருள்பற்றிய அறிவும் எதையும் பகுத்தறியும் தன்மையும், காரணம் கண்டே எதையும் ஏற்றுக்கொள்ளும் போக்கும், அறிவுடன் தொடர்பு கொண்ட ஆற்றலும்,