பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


மக்களிடம் மட்டற்ற அன்பும், அவர்களை வாழச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும், அவர்கள் அனைவரும் வஞ்சிக்காமல், சுரண்டாமல், அடக்கி ஆளாமல், அடிமைப்படாமல் வாழக்கூடிய விதத்தில் நாட்டின் வளத்தையும் முறையையும் புதுப்பிக்க முடியும் என்ற எண்ணமும், பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல என்ற எண்ணமும், வாலிபர்களுக்குத் தேவை. சிற்பியிடம் கற்பாறை தரப்படுகிறது. அவன் வேலைக்கான மூலப்பொருள்—இனி அவனுக்குத் தேவை சிறிய உளியும், பெரிய உள்ளமும் சுதந்தர இந்தியாவிலே. இது போலவே, வாலிபர்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதை உணர்ச்சியும் தேவை—புது வாழ்வு பெற—முழு வாழ்வு பெற.


இவ்வரிய சொற்பொழிவைப் புத்தக வடிவாக்க உரிமை நந்த திருச்சி வானொலி நிலையத்தாருக்கு எமது நன்றி.