8
பிறக்கும்—நான் என்ன சீமானா—சம்பளம் எனக்கு 150 சார்; நூற்று—ஐம்பதுதான், உல்லாச யாத்திரை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர் என்று கண்டித்துப் பேசுவார்.
ஆனால் மிகக் கஷ்டப்பட்டு நான்கு நாட்கள் லீவு பெற்றாலும் குழந்தைக்கு மொட்டையடிக்க திருப்பதிக்கோ, அம்மா சிரார்த்தத்துக்குக் காவிரிக்கோ, புத்திர சந்தான நிமித்தம் ராமேஸ்வரமோ போயிருப்பர். அதற்குப் பணம் எப்படிக் கிடைத்தது என்று கேட்டாலோ கோபம் கொதித்து வரும். இலக்கியம் எப்படி வளரும்? கலை மணம் எங்கிருந்து கமழும்? ஓவியக்கலை எவ்வண்ணம் ஓங்க முடியும்? நல்லிசை எங்கிருந்து பிறக்கும்? இயற்கை தரும் களிப்பைக் கண்டு மனதிலே கலையுணர்ச்சியைப் பெறாவிட்டால் வசதியுள்ள மிகமிகச் சிறு கட்டமும், ஓய்வு நேரத்தைத் தக்கபடி பயன்படுத்தி தருகிறது.
அலுத்துத் தூங்கும் அந்த ஆலைத் தொழிலாளி, காலையிலே எழுந்ததும் கதிரவனைக் கண்டு களித்திடும் கமலத்தைக் காணப் போவதுமில்லை. இரவு நிலவின் அழகினைக் களித்து விட்டுப் படுத்தவனுமல்ல—அதோ சற்று தொலைவாகப் படுத்திருக்கும் மாது—அவன் தர்ம பத்தினி அவளிடம் உதிர்ந்த கண்ணீரைத்தான் இரவு படுக்கும்போது பரிசாகப் பெற்றான். அந்தப் பரிசும் சுலபத்திலே அவனுக்குக் கிடைத்து விடவில்லை—காலை முதல் ஆலையில் பாடுபட்டு அலுத்துப்போன கரத்துக்கு வேலை கொடுக்கிறோமோ என்ற எண்ணமுமின்றி அம்மையை அறைந்தான் முதுகில், கன்னத்தில்—தன் தலையிலும் அடித்துக் கொண்டான்—பிறகு தான் கண்ணீரைக் காணிக்கையாக்கினாள், பத்தினி—காலையிலே ஆலைச்சங்கு அலறுவதற்கு முன்பு அழுகுரல் இவன் காதை துளைக்கக்கூடும். இந்தத் தோழனிடம் ஓய்வின் உயர்வைப் பற்றிப் பேசுவது ஓய்வை எப்படி பயன்படுத்துவது என்று எடுத்துக் கூறுவது; மாளிகையிலே திமிர் பிடித்து உலவும் நாய், பணியாளைக் கடித்தது கண்டு, சீமான் இன்னமருந்து சாப்பிட்டால் நல்லது ஆபத்து இராது என்று பணியாளுக்கு யோசனை கூறுவது போன்றதாகும். உழைப்பாளியை உருக்குலையச் செய்யும் தொழில் முறையை மாற்றி, சக்திக்கேற்ற உழைப்பு, தேவைக்கேற்ற வசதி என்ற திட்டத்தை வெற்றியுடன் நடத்திக் காட்டினாலொழிய, ஓய்வு பற்றி ஆராய்ச்சி செய்வது அறிவையும், அலட்சிய சுபாவத்தையும் ஆதாரமாகக் கொண்டு நடத்தும் நாகரிக உலகத்து நயவஞ்சக நாடகம் என்றே கூறவேண்டும்.
இவ்வரிய சொற்பொழிவைப் புத்தக வடிவாக்க உரிமை தந்த சென்னை வானொலி நிலையத்தாருக்கு எமது நன்றி