பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

 அதிகமான் நெடுமான் அஞ்சி

நேரே வெற்றிக் களத்திலிருந்து ஓடிவந்திருக்கிறான், அவன் மனைவி தவமகனைப் பெற்றிருந்தாள். அவனோ வெற்றி மகளைப் பெற்று வந்தான். ஆர்வத்தோடு புகுந்து நின்ற அதிகமானுக்கு அவன்குலத்தை விளக்க வந்த குழந்தையைக் கெண்டுவந்து காட்டினார்கள். ஔவையார் அருகிலே நின்றுகொண்டிருந்தார்.

வெற்றி மிடுக்குடன் போர்க்கோலத்தைக் களையாமல் வந்து நிற்கும் அதிகமான அவர் கண் எடுத்துப் பார்த்தார். அவன் தோற்றம் அவருக்கு வியப்பைத் தந்தது. அவன் எப்படிக் காட்சி அளித்தான் ?

கையில் வேல்; காலில் கழல்;உடம்பிலேவேர்வை; அவன் கழுத்திலேபச்சைப்புண். அவன்தலையிலேபனை மாலை; போர் செய்ய அணிந்தவெட்சி மாலை, வேங்கைக் கண்ணி இவற்றை அவன் முடியிலே சூடியிருந்தான். புலியோடு பொருத ஆண் யானையைப்போலஇன்னும் அவனுக்குப் பகைவர்பால் உண்டான சினம் அடங்கவில்லை. அவனோடு பொருதவர்களில் யார் உய்ந்தார்கள்? பகைவர்களைக் கண்டு சினத்தாற் சிவந்தகண் இன்னும் சிவப்புத் தீரவில்லை; ஆம், தன் தவக்கொழுந்தாகிய மகனைப் பார்த்தும் கண் சிவப்பு வாங்கவில்லை.

வீரமே இப்படி உருவெடுத்து வந்ததோ என்று வியந்தார் ஔவையார். அவருடைய வியப்புணர்ச்சி உடனே பாடல் வடிவத்தை எடுத்தது.

கையது வேலே; காலன புனேகழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்.
வட்கர் போகிய வளர்.இளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசிவெண் தோடு
வெட்சி மாமலர் வேங்கையொடு விரை இச்
சுசியிரும் பித்தை பொலியச் சூடி
வரிவயம் பொருத வயக்களிறு போல