பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயலும் இசையும்

55

போது திருக்கோவலூரில் அவன்பெற்ற வெற்றியைப் பரணர் பாடியதைக் காதாரக் கேட்டு அவர் மனம் நிறைவு பெற்றது. ஒரே மாதிரி அணிகளையும் மாலைகளையும் அணிந்து புனைவதைவிட, பலவகை மணிகளையும் அணிகளையும் பல வண்ண மாலைகளையும் அணிந்து கோலம் செய்வதுதானே சிறப்பாக இருக்கும்? அது போன்ற சிறப்பு இப்போது அதிகமானுக்கு உண்டாகி விட்டது என்று அந்தத் தண்டமிழ்ச் செல்வியாருக்கு மகிழ்ச்சி பொங்கியது. அவரும் ஒரு பாட்டுப் பாடினார்.

“உன்முன்னோர்கள் அரிய செயல்கள் பல செய்தவர்கள். அமரர்களை வழிபட்டு வேள்விகளைச் செய்து ஆகுதி அளித்தார்கள். பெறுவதற்கரிய உயர்ந்த வகையான கரும்பை இந்த நாட்டுக்குக் கொண்டு வந்து விளையச் செய்தார்கள். கடல்புடை சூழ்ந்த உலகில் தம் ஆழியைச் செலுத்தி வழிவழியாக ஆண்டுவந்தார்கள். அவர்களைப் போலவே நீயும் பல அரிய செயல்களைச் செய்தாய். அவர்களைப்போலவே வீரத்துக்கு அடையாள மாகப் பொன்னலாகிய வீரக்கழலை அணிந்திருக்கிறாய். உன் குலப்பெருமையைக் காட்டும் பனைமாலையைப் புனைந்திருக்கிறாய். அவர்கள் தேவர்களை நிறுவி விழாவெடுத்து வழிபட்ட அழகிய மலர்ப் பொழிலை நீஇன்றும் காத்து வருகிறாய். அவர்கள்ஏந்தியது போலவே வேலை ஏந்தி நிற்கிறாய். அவர்கள் ஏழு மன்னர்களை வென்றதற்கு அடையாளமாக அம்மன்னர்களின் அடையாளக் கொடிகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அவர்களிடமிருந்து நீ உரிமையைப் பெற்ற பின்பு, நீயும் ஏழு பேரோடு பொருது வென்றாய். இவ்வளவு சிறப்புடைய நீ அன்றோ பாடுவதற்குரிய பெரும் புகழோடுநின்றாய்? இன்று உன் புகழ் பின்னும் மிகுந்திருக்கிறது. திருக்கோவலூரில் காரியோடு மலைந்து பெற்ற வெற்றி எல்லோருக்கும் கிடைக்குமா? இப்போது நீ ஏந்தும் ஆழி