பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அதிகமான் நெடுமான் அஞ்சி


“என் வரவையா?” என்று மலையமான் கேட்டான்.

“உம் வரவை ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.”

“பின்னே எதை எதிர்பார்க்கவில்லே?”

“நீர் தோல்வியுறுவீர் என்பதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அதிகமான் உம்மிடம் சிக்கிக் கொள்வான் என்றே நம்பினேன்.”

“ஆனைக்கும் அடி சறுக்கும் என்னும் பழமொழிக்கு நான் எடுத்துக்காட்டாகி விட்டேன். கொல்லிக் கூற்றப் போரில், எதிர்பார்த்ததை விட மிகுதியான நாட்கள் போரிடும்படி நேர்ந்தது. அந்த நாட்டினர் ஓரியிடம் பேரன்புடையவர்களாக இருந்தார்கள். ஆகையால் பலர் படையிலே சேர்ந்து போரிட்டார்கள். எங்கள் முழு வலிமையையும் காட்டும்படி நேர்ந்தது. அதனால் என் படைவீரர்கள் களைப்படைந்திருந்தனர். அந்தச் சமயம் பார்த்து அதிகமான் வந்தான். களைத்துப்போன படையை வைத்துக்கொண்டு போரிடும்படி ஆகிவிட்டது. துணைப்படை ஒன்றும் வரவில்லை அல்லவா?”

தான் துணையாகப் படையை அனுப்பவில்லையென்பதை மலையமான் குறிப்பாகச் சுட்டிக்காட்டுகிறான் என்று சேரமான் தெரிந்துகொண்டான். எல்லோருக்கும் துணையாகச் சென்று வெற்றியை வாங்கித் தரும் உமக்குப் பிறர் துணை எதற்கு என்று எண்ணிவிட்டேன். சரி, நடந்தது நடந்துவிட்டது. இனிச் செய்ய வேண்டியதையே ஆராயவேண்டும்” என்றான் பெருஞ்சேரல் இரும்பொறை.

“என்ன செய்வது என்பதை நாடு இழந்து நிற்கும் நானா சொல்லவல்லேன்? இத்தகைய அவமானம் என் வாழ்க்கையில் பட்டதில்லை. அதிகமான் முன் நின்று போர் செய்து உயிரை நீத்திருக்கலாம். அந்தச் சமயத்தில் அந்த எண்ணம் தோன்றவில்லை. எனக்கு